என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:
உணவு பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி ஒரு வாரத்திற்குள் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அட்டை வழங்க வேண்டும். வரப்பெறும் ரேஷன் அட்டைகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். வட்ட வழங்கல் அலுவலர்கள் தனிர் கவனம் செலுத்தி பணியாற்றிட வேண்டும்.
மாவட்டத்தில் 614 ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. சில ரேஷன் கடைகளில் பச்சரிசி, பாமாயில் கிடைப்பதில்லை என தெரிய வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்கள் உடனடியாக இரண்டு அரிசியும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமாயில், பருப்பு போன்ற பொருட்களும் இருப்பில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து நேரடியாக என்னுடைய பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, பொது வினியோகம் துணைப்பதிவாளர் முரளிகண்ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓச்சேரியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
சென்னை அல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் தாஸ் என்ற ஆதிகேசவன் (வயது 27). சென்னை சென்டிரலில் கூலி வேலை செய்து வருகிறார். விருத்தாச்சலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல் என்ற சப்பை (21). வண்டலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (19). இவர்கள் இருவரும் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று சென்னையில் இருந்து வேலூருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். ஓச்சேரியில் இறங்கி டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு கையில் பீர் பாட்டிலை வைத்துகொண்டு ஓச்சேரி பஸ் நிறுத்தத்தில் வேலூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த 3 பேரும் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையில் பீர் பாட்டிலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அவளூர் போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே வேடல் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி குப்பம்மாள் (வயது 45). சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதனை கைவிடுமாறு குப்பம்மாள் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த குப்பம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சந்திரசேகரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காட்டில் வீட்டின் பீரோவை திறந்து 20 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புகானா பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 48). இவருடைய மகள் பாரதிக்கு சீமந்த விழா கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது.
அதற்காக வீட்டைப் பூட்டிக்கொண்டு வாலாஜாவை அடுத்த ஓச்சேரி பகுதிக்கு சென்றார். பின்னர் உறவினர்களுடன் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் மகளின் பிரசவ சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற பணம் தேவைப்பட்டது. அதற்காக வீட்டில் இருந்த நகைகளை அடகு வைக்கலாம் எனக்கருதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பார்வதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை மண்டித் தெரு பகுதியை சேர்ந்தவர் ஷேனவாஸ் (வயது 31). இவர் நேற்று ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனது கடையில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், ஷேனவாஸை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காவேரிப்பாக்கம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாகுமாரி (வயது 23). இவர், நேற்று முன்தினம் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த திமிரி பஜாரில் திமிரி வட்டார சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) மணி, சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, சொக்கலிங்கம் மற்றும் குழுவினர் திமிரி பஜார் வீதி, வணிக வீதியில் பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் கடைகளில் புகைபிடித்தல் சட்டப்படி குற்றமாகும். மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று விளம்பர பலகை வைக்க வேண்டும் என கடைக்கார்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது திமிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி உடனிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவிவ்லை.
மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ்பிரவின்ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் பொது மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, உதவியாளர் திலகா, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவிவ்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.






