என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    காவேரிப்பாக்கம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

    காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ்பிரவின்ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் பொது மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, உதவியாளர் திலகா, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×