என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சகுந்தலா. நிறைமாத கர்ப்பிணியான சகுந்தலாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கலவை பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் சகுந்தலாவை வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆரணி அடுத்த சேவூர் செல்லும் வழியில் சகுந்தலாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் செவிலியர் ஜிலானிஆகிய இருவரும் பிரசவம் பார்த்தனர். இதில் சகுந்தலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Next Story