என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெண் பலி
Byமாலை மலர்8 Aug 2021 1:12 PM GMT (Updated: 8 Aug 2021 1:12 PM GMT)
ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெண் பலியானார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பஷீரூனிஷா (வயது 55). இவர் தனது பேரன் சுபியான் (19) என்பவரின் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
அல்லிகுளம் கூட் ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சுபியான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அந்த மோட்டார் சைக்கிள் அதே சாலையில் மேல்விஷாரத்தை சேர்ந்த அன்சர் பாஷா (45) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுபியான் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கீழே விழுந்தது.
அந்த மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற பஷீரூனிஷா பலத்த காயமடைந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்சர் பாஷாவிற்கும் காயம் ஏற்பட்டது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோ மூலம் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பஷீரூனிஷாவை டாக்டர்கள் பரிசோதித்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு நபரான அன்சர் பாஷா மேல் விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×