என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தொல் திருமாவளவனை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு
    • அர்ஜூன் சம்பத் கொடும்பாவி எரித்ததால் பரபரப்பு

    அரக்கோணம்:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை இழிவாக பேசியது கூறி அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரக்கோணம் நகர செயலாளர் அப்பல் ராஜ் தலைமை தாங்கினார் செயலாளர். சந்தர் முன்னிலை வகித்தனர், அர்ஜுன் சம்பதை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர், திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் கவுதமன் கோபு, ராணிப்பேட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கவுதம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன், ஒன்றிய செயலாளர் நரேஷ், ஒன்றிய பொருளாளர் வஜ்ஜிரவேல், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், நகரச் துணை செயலாளர்கள் நாகராஜ், சம்பத், வேளாங்கண்ணி, உள்பட கட்சியின் நகர ஒன்றிய நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மறைத்து வைத்திருந்த அர்ஜுன் சம்பத் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    திடீரென போலீசார் உருவ பொம்மை மீட்க போராடிய போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பாப்பேரி கிராமம் குளத்தங்கரை தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பரசுராமன் என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பரசுராமன் இவரது மனைவி இருவரும் வீட்டின் முன்பக்கம் கதவை பூட்டிக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து செயின் உட்பட 19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர் வீட்டிற்கு திரும்பிய பரசுராமன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பரசுராமன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர் இதை அடுத்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தொழிற்சங்க துணைத்தலைவர் தகவல்
    • தொழிலாளர் தின விழா நடந்தது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் அகில இந்திய எஸ்.சி., எஸ்டி ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட துணைத் தலைவர் ஞானசேகரன் ெரயில்வே நிர்வாகம் தனியார் மையம் ஆக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ெரயில்வே ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார்.

    இதனை தொடர்ந்து ஞானசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ெரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

    தற்போது புதிதாக இயக்கப்பட்ட தனியார் ெரயிலில் மும்மடங்கு கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் சாதாரண பயணிகள் ரெயிலை தற்பொழுது விரைவுரெயிலாக மாற்றி ரெயில்வே நிர்வாகம்ரெயில் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ரெயில்வேவில் பணியாற்றக்கூடிய ஊழியர்களை வஞ்சிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகம் கூறினார்.

    ெரயில்வே துறையில் 2 லட்சம் அளவிற்கு காலி பணியிடங்கள் உள்ளது இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் காலி பணியிடங்களை முடக்கி வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரக்கோணம் கிளைச் செயலாளர் ராஜேஷ் பொருளாளர் வெங்கடேசன் துணைத் தலைவர் மதன் துணை செயலாளர் குணசேகரன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    சோளிங்கர்:

    சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. 67-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி எம்பிக்கள் திருநாவுக்கரசு ஜெகத்ரட்சகன் இளங்கோவன் ஆகியோர்கள் தொலைபேசியில் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் நகர தலைவர் ஊராட்சி மன்ற தலைவரும் பொறியாளருமான தாசரதி, சோளிங்கர் நகர தலைவர் டி.கோபால் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கொடைக்கல் கார்த்தி காட்ரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒழுகூர் சுப்பிரமணி, செங்கல் நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி, வழக்கறிஞர் ரகு ராம்ராஜ், தி.மு.க.வைச் சேர்ந்த சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் தலைக்குமார், மாவட்ட அவை தலைவர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, அசோகன் துணைத் தலைவர் பழனி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து மற்றும் அனைத்து கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 45). இவர் பொன்னையில் நகை அடகு கடை வைத்துள்ளார்.இவரது தம்பி ராணிப்பேட்டையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு நரேஷ்குமார் ராணிப்பேட்டையில் உள்ள அவரது தம்பி கடைக்கு சென்றார். அங்கிருந்து 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். ஜீவானந்தம் சாலையில் வீட்டின் அருகே வந்து தனது பைக்கை நிறுத்தினார்.

    அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி கொண்ட அவர்கள் நரேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்துக் கொண்டு வேலூர் நோக்கி தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நரேஷ் குமார் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சுமதி மினி தியேட்டரில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி திரையரங்கு முழுவதுமாக பற்றி எரிந்தது.
    • தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே சுமதி தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் உள்ள சுமதி மினி தியேட்டரில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ வேகமாக பரவி திரையரங்கு முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

    ஆனால் தீ மீண்டும் எரியத் தொடங்கியதால் கூடுதலாக அரக்கோணத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    தியேட்டர் முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சி திரையிடப்படாத நேரத்தில் தீ விபத்து எற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • அரக்கோணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் குறைதீர்வு சிறப்பு முகாம் நடத்தினர்.
    • இதில் அரக்கோணம் பகுதியிலுள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பாராஞ்சி ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தளபதி (வயது32). இவரது மனைவி மீனா காயத்ரி. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தளபதி வீட்டிற்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மீனா காயத்ரி புகார் மனு ஒன்று அளித்தார். அதில் தனது கணவர் தளபதி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் குறைதீர்வு சிறப்பு முகாம் நடத்தினர். இதில் அரக்கோணம் பகுதியிலுள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மீனா காயத்ரி கொடுத்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் தளபதியை தொடர்பு கொண்டு அவரை விசாரணைக்கு அழைத்தனர். மனைவி புகாரால் விசாரணைக்கு அழைத்ததால் தளபதி மனம் உடைந்தார். பூச்சி மருந்து குடித்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு சென்றார்.

    போலீசார் அவரிடம் விசாரித்த போது பூச்சி மருந்து வாடை வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் இதை பற்றி கேட்டபோது அவர் பூச்சி மருந்து குடுத்து விட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக அவரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தளபதி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி புகாரால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வியாபாரிகள் பொதுமக்கள் அவதி
    • சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரைச் சுற்றிலும் பலகிராமங்கள் உள்ளது.ராணிப்பேட்டையிலும், அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டைக்கு அருகிலேயே சிப்காட் என்ற மிகப் பெரியதொழிற்பேட்டை உள்ளது. இத்தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்ட தலைநகராகவும் உருவாகியுள்ளது.

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டையில் இருந்து மாநிலத் தலைநகரான சென்னைக்கு செல்வ தென்றாலும், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வருவது என்றாலும் போதுமான பஸ் வசதிகள் இல்லை. பெரும்பாலான பஸ்கள் ராணிப்பேட்டை பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.

    அவர்கள் வாலாஜாவில் இறங்கி வேறு பஸ் ஏறிதான் ராணிப்பேட்டைக்கு வரவேண்டும். ராணிப்பேட்டையில் இருந்து சென்னை செல் வதென்றால், வாலாஜா சென்று தான், சென்னை செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும். இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை தருகின்றது.

    வயதானவர்களும், பெண்களும், மற்றும் குடும்பத்துடன் சென்னை செல்பவர்களும் இதனால் பெரிதும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள் ளது. வியாபார நிமித்தமாக ெசன்னை செல்லும் வியாபாரிகளும், சிரமப்படுகின்றனர். எனவே சென்னையிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண் டும். இதே போல் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பஸ்களும், பிறபகுதிகளில் இருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பஸ்களும் ராணிப்பேட்டைக்குள் வந்து செல்லவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர் களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 500-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜூலை.4 கொடைக்கல் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கட்டைக் கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்துக்காட்டினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் கள்.

    • அரக்கோணம்-நெமிலி பகுதியில் நடந்தது
    • டிரைவர், உதவியாளர்களுக்கு ஆலோசனை

    அரக்கோணம் :

    அரக்கோணம் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் இயங்கும் 175 வாகனங்கள் அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பேருந்துகளை இயக்கம் ஓட்டுனர்களுக்கும் அதில் உதவியாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    பள்ளி வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்களை இறக்கி விடும்போது அவர்களை சம்பந்தப்பட்ட பெற்றோரிடமும் பாதுகாப்பினரிடமோ பத்திரமாக கையில் ஒப்படைக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாகனத்திற்கும் முன்பக்கம் பின்பக்கம் என 2 சி.சி.டி.வி. கேமராக்கள் கண்டிப்பாக பொருத்தியாக வேண்டும்

    பள்ளி வாகனத்திற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கு கடைபிடிக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் அந்த வாகனத்தின் மீதும் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்

    நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆர்டிஓ பாத்திமா டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பங்கு பெற்றனர்.

    • முறையான சலுகைகளை வழங்க வேண்டும் என வலியறுத்தல்
    • முறைகேடு நடந்துள்ளதாக புகார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நந்திமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேளாண்மை அதிகாரிகளை கண்டித்தும் தனிநபர் செயல்பாட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பனர்.

    உடனடியாக கூட்டுப் பண்ணை குழு மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முறையான சலுகைகளை வழங்க வேண்டும்.

    மேலும் தங்களை ஏமாற்றி மாணிக்கம் இது முறைகேடு நடத்திய அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    விவசாயிகளின் மானியம் மீது முறைகேடு நடத்தியதாக வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் மானியத்தில் முறைகேடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை மற்றும் காரணமாக சோளிங்கர் அடுத்த ஆயில் ஏரிக்கரை வழியாக சோளிங்கரில் இருந்து காவேரிப்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலை ஆயில் ஏரிக்கரை நடுவே 6 அடி அகலமும் 60அடி நீளமும் மழையின் காரணமாக விவசாய கிணற்றில் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதனால் அப்போது போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக கிணற்றுக்குள் சரிந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் மேலும் நிரந்தர சாலை அமைப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அப்போது தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு சாலை பகுதியை சீரமைத்தனர். நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சரிந்த சாலை பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மழையில் கரைந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விபத்து பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாவட்ட அமைச்சர் உத்தரவிட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலை சீரமைக்கப்படாதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    ×