என் மலர்
நீங்கள் தேடியது "மானியம் மீது முறைகேடு"
- முறையான சலுகைகளை வழங்க வேண்டும் என வலியறுத்தல்
- முறைகேடு நடந்துள்ளதாக புகார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நந்திமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேளாண்மை அதிகாரிகளை கண்டித்தும் தனிநபர் செயல்பாட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பனர்.
உடனடியாக கூட்டுப் பண்ணை குழு மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முறையான சலுகைகளை வழங்க வேண்டும்.
மேலும் தங்களை ஏமாற்றி மாணிக்கம் இது முறைகேடு நடத்திய அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளின் மானியம் மீது முறைகேடு நடத்தியதாக வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் மானியத்தில் முறைகேடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






