என் மலர்
உள்ளூர் செய்திகள்

முனிரத்தினம் எம்.எல்.ஏ.வுக்கு அனைத்து கட்சியினர் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.
முனிரத்தினம் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா
- வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்
- ஏராளமானோர் பங்கேற்பு
சோளிங்கர்:
சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. 67-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி எம்பிக்கள் திருநாவுக்கரசு ஜெகத்ரட்சகன் இளங்கோவன் ஆகியோர்கள் தொலைபேசியில் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் நகர தலைவர் ஊராட்சி மன்ற தலைவரும் பொறியாளருமான தாசரதி, சோளிங்கர் நகர தலைவர் டி.கோபால் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கொடைக்கல் கார்த்தி காட்ரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒழுகூர் சுப்பிரமணி, செங்கல் நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி, வழக்கறிஞர் ரகு ராம்ராஜ், தி.மு.க.வைச் சேர்ந்த சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் தலைக்குமார், மாவட்ட அவை தலைவர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, அசோகன் துணைத் தலைவர் பழனி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து மற்றும் அனைத்து கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






