என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema theatre fire"

    • சுமதி மினி தியேட்டரில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி திரையரங்கு முழுவதுமாக பற்றி எரிந்தது.
    • தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே சுமதி தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் உள்ள சுமதி மினி தியேட்டரில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ வேகமாக பரவி திரையரங்கு முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

    ஆனால் தீ மீண்டும் எரியத் தொடங்கியதால் கூடுதலாக அரக்கோணத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    தியேட்டர் முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சி திரையிடப்படாத நேரத்தில் தீ விபத்து எற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    ×