என் மலர்
ராணிப்பேட்டை
- மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் நிறுத்தம் நீடித்தது.
- அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு
சோளிங்கர்:
சோளிங்கர் மற்றும் சுற்று பகுதிக்கு பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
இதனால் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதி, கிழக்கு பஜார், கிருஷ்ணசாமி முதலி தெரு நாரை க்குளம், போர்டின் பேட்டை, வெங்கட்ராமன் பிள்ளை தெரு செங்குந்தர் பெரிய தெரு, தோப்புளம்மன் பகுதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, ராமசாமி முதலி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் பில்லாஞ்சி, சோமசமுத்திரம், கல்பட்டு, ஈடிகை பேட்டை உள்ளிட்டகிராம புறப் பகுதிகளில் மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் வெட்டு நீடித்தது.
தொடர்ந்து 4மணிநேரம் மின்வெட்டால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த விதமான பதிலும் இல்லை. தொடர்ந்து மின்வெட்டால் மாணவ மாணவிகள் விளக்கு வெளிச்சத்திலும், மொபைல் வெளிச்சத்திலும் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டனர்.
இதுபோல் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆளாகினார்கள் இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது எந்த பதிலும் தெரிவிப்பதிலை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர் .இனி வருங்காலங்களில் அதிகாரிகள் மின்வெட்டு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
- செங்கல் ஏற்றி சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காளத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி ( வயது 21 ), கூலித்தொ ழிலாளி .
இவர், டிராக்டரில் செங்கல் பாரத்தை ஏற்றிக் கொண்டு சின்னகந்திலியில் உள்ள முருகன் என்பவருடைய நிலத்தில் இறக்கி கொண்டிருந்தார். அப்போது, டிராக்டரில் இருந்து தவறி கீழே தலை குப்புற விழுந்தார்.
அதில் கோவிந்தசாமியின் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயி ரிழந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கூட்ரோட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை மாலதி வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். கம்பெனி அருகே நடந்து சென்றபோது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து மாலதி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வீராணம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 60) இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனிரத்திரனம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிரத்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முனிரத்தினம் மகன் விஜயகாந்த் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- 2 நாட்கள் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 கான மாதிரி தேர்வுகள் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தொகுதி -4 -க்கான போட்டி தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 9, 16-ந் தேதிகளில் (2 நாட்கள்) நடைபெற உள்ளது.
இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 04172-291400 தொலைபேசி மூலமாகவோ, ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவ நகல், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டி ருந்தது.
- போதைப் பொருளின் ஆபத்தையும் எடுத்துரைத்தனர்
- 500க்கும் மேற்பட்ட மாணர்கள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த காவனூரில் அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் விவேகானந்தர் வித்யாலயா பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளின் ஆபத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறியதோடு இதுபோல குற்றம் செய்யும் சக மாணவர்கள் என தெரிந்தால் அவர்களுக்கு நண்பர்கள் என்ற முறையில் அறிவுரை வழங்கி அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் பெற்றோருடன் ஆசிரியர்களிடமோ இதுகுறித்து ரகசியமாக தெரியப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது ஒவ்வொரு மாணவனின் கடமை என அறிவுரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அன்பின் வழியில் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவ மாணவிகள் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். இறுதியில் பள்ளி முதல்வர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மலேசிய முருகர் சிலை
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ வள்ளி தெய்வானை ஐயப்பன் மற்றும் மலேசிய முருகன் கோவில் அமைந்துள்ளது.
கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை சித்தர் மற்றும் ரத்தினகிரி சாமிகள் சித்தஞ்சி சிவ காளி பீட சாமிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் வேடந்தாங்கல் மகேந்திரவாடி புதுப்பட்டு ஆகிய சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு புஷ்பவனம் குப்புசாமி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
- 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
நெமிலி:
ராணிபட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகிசமேத ரங்கநாத ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் பல ஆண்டுகளாக புணரமைக்கப்பட்டு வந்தநிலையில் கும்பாபிஷேவிழா கடந்த 4ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது.
விழாவில் காலை அகல்மஷ ஹோமம், எஜமானர் சங்கல்பம், ஆசார்யரித்வீக்வரணம், புண்யாஹவசனம், அக்னிப்ரதிஷ்டை, முதல்காலபூரணாஹுதி, மறுநாள் (செவ்வாய்கி ழமை) அக்னிபிரணயனம், மஹாசாந்தி ஹோமம், 2ஆம் கால பூரணாஹுதி, புதியவிக்கிரகங்கள் கரிக்கோலம் அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், அக்ஷினமோசனம்,
பஞ்சகவ்யவாசம், ராப்திவாசம.மாஹாசாந்திமஞ்சணனம், பூரணாஹுதி, 3-ம்நாள் (புதன்கிழமை)காலை விஸ்வரூபம் புன்யாஹவசனம், தம்பராதனம் ஹோமம் நிறெவாகமஹா பூரணாஹுதி நடைபெற்றது. யாகசாலைபூஜைகள் முடிவடைந்து மேலதாளங்கள் முழங்க கும்பாபிஷேக கலசங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ராஜகோபுரம், மூலவருக்குப்ரோக்ஷனை, ரங்கநாயகித்தாயாருக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம் செய்யபட்டது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா!கோவிந்தா! என முழங்கியவாறு பக்தியுடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.
- போக்சோ சட்டம் பாய்ந்தது
- பைக்கில் சென்றவரை மடக்கிப் பிடித்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22)இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணை யுவராஜ் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 16 வயது சிறுமியை கடத்தியவர் மீது பெண்ணின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ஜாகீர் தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த யுவராஜ் மற்றும் 16 இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து போச்சோயில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவர்கள் பலர் பங்கேற்றனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5.74 லட்சத்தில் டெஸ்க், பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏ எம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு டெஸ்க், பெஞ்ச் பள்ளி, கல்லூரிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர செயலாளர் கோபால், திமுக நகர செயலாளர் கோபி, ஆசிரியர் மேரி செரின், உதவி தலைமை ஆசிரியர்கள் மணிவண்ணன் ரவிச்சந்திரன், பட்டறை மணி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.
- ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் ( வயது 46 ) , கார் மெக்கானிக் . இவர் வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு காரில் தனியாக சென்றுள்ளார்.
பின்னர் இரவு மீண்டும் வேலூர் நோக்கி வந்துள்ளார் . ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அருகே வந்தபோது, கார் நிலைத்தடுமாறி சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது . இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரதீப் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
- போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்்ப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாலை அருகில் உள்ள மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தன் (வயது 22). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதியன்று 7 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகந்தனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் குற்றச்சாட்டப்பட்ட சுகந்தன் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளதால் சுகந்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் மூலம் இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.






