என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.
போதை ஒழிப்பை வலியுறுத்தி மாணவிகள் உறுதிமொழி
- போதைப் பொருளின் ஆபத்தையும் எடுத்துரைத்தனர்
- 500க்கும் மேற்பட்ட மாணர்கள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த காவனூரில் அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் விவேகானந்தர் வித்யாலயா பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளின் ஆபத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறியதோடு இதுபோல குற்றம் செய்யும் சக மாணவர்கள் என தெரிந்தால் அவர்களுக்கு நண்பர்கள் என்ற முறையில் அறிவுரை வழங்கி அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் பெற்றோருடன் ஆசிரியர்களிடமோ இதுகுறித்து ரகசியமாக தெரியப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது ஒவ்வொரு மாணவனின் கடமை என அறிவுரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அன்பின் வழியில் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவ மாணவிகள் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். இறுதியில் பள்ளி முதல்வர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






