என் மலர்
ராணிப்பேட்டை
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
- பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷேரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் தமிழ்செல்வி கலந்துகொண்டு.
அடிப்படை கட்டமைப்பு வச திகள் குறித்தும், மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புற சூழல் குறித்து விவாதித்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருமே மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என கூறினார். நக ராட்சி உறுப்பினர்கள் சுசீலா, அன்பரசு, அசோகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விற்பனையாளர்களுக்கு அறிவுரை
- எடையளவு குறித்து சோதனை செய்தார்
ராணிபேட்டை:
ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம், எடையளவு குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது விற்பனையாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
- தீ மிதி விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சோளிங்கர்
சோளிங்கர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது.
நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய் க யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரி யோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டைக் கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்து காண்பித்தனர். தொடர்ந்து மாலையில் தீ மிதி திருவிழா நடந்தது. இதற்காக அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
அதன் அருகில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த சி பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
- 2 தனிப்படை அமைக்கப்பட்டது
- ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது22). பிரபல ரவுடியான இவர் நேற்று உடல் துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்குமார் கடைசியாக செல்போனில் யாருடன் பேசினார்.சரத்குமாரின் செல்போன் எந்த எந்த இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
சரத்குமாரை சக நண்பர்களே தீர்த்து கட்டினார்களா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தனிப்படையினர் அரக்கோணம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சரத்குமாரை அழைத்துச் சென்றவர்களை அவரது பெற்றோர் பார்த்து உள்ளனர் அவர்கள் தெரிவித்த அங்கு அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சரத்குமாரின் பிணம் இன்று பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதனால் பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- பெரிய அதிகாரிகளாக வர மாணவர்களை வாழ்த்தினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பின்னர் காரை கூட்ரோடு அருகே வருகை தந்து கொண்டிருக்கும் போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தை திடீரென ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மாணவர்களிடம் கேட்டறிந்து அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் 55 மாணவர்களுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் போர்வை, தலையணை, பாய், கட்டில் உள்ளிட்ட பொருட்களை அவரது சொந்த செலவில் நேற்று வழங்கினார்.
அப்போது அமைச்சர் காந்தி பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு இல்லங்களில் தங்கி படிக்கு மாணவ மாணவிகளுக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மாணவர்களிடம் நன்கு படித்து சமுதாயத்தில் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, வட்டாட்சியர் ஆனந்தன், நகரமன்ற உறுப் பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாணாவரம் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 3 பேர் திருவள்ளூர் மாவட்ட போலீசார் என கூறி சரத்குமாரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சோ்ந்தவர் அசோக்குமாா் என்பவரது மகன் சரத்குமாா்(வயது 22) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இன்று காலை பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டபட்ட நிலையில் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் டி.எஸ்.பி.பிரபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பாணாவரம் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேர் திருவள்ளூர் மாவட்ட போலீசார் என கூறி சரத்குமாரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சரத்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பல வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாா் தனிப்படை அமைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த நபா்களை தேடி வருகின்றனா்.
- திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரி (23). இவர் நேற்று அவரது உறவினர் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லோகேஸ்வரி திடீரென மயக்கம் அடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த லோகேஸ்வரி உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நான்கு மாட வீதிகளில் சாமி உலா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் 108 திவ்ய தேசங் களில் ஒன்றான அருள்மிகு யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ஆனி சுவாதியை யொட்டி கருட சேவை உற்ச வம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பக்தோசிதப்பெ ருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
பெரியாழ்வார் வெள்ளை வாகனத்தில் யானை முன்னே செல்லபக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில் மங்களவாத்தியங்க ளுடன் நான்கு மாட வீதி களில் உலா வந்து பக்தர்க் ளுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.
இதில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட செய்தனர். கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- 2 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
- 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் தொழிலதிபர் ஆகிட பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் திட்ட விளக்கவுரை மற்றும் விண்ணப்பம் திரட்டல் முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஆகியோரின் அறிவுரைப்படி, 2 நாட்கள் இத்திட்டத்தின் சிறப்பு விழிப்புணர்வு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளாண்மை விலை பொருட்களை மதிப்பு கூட்டி புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் மற்றும் ஏற்கனவே தொழில் செய்வோர் தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்த இத்திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியத்துடன் கூடிய மூலதன கடன் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் வ
ிளை விக்கும்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோர்கள் உருவாக்கிட இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வேளாண்துறை சார்பில் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விலைப் பொருட்களை வேளாண்மை விற்பனை முறையின் மூலம் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், விலை ஆதாரத்திடம் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்து பயனடையலாம், உற்பத்தி செய்யும் விலை பொருட்களை நல்ல முறையில் விற்பனை செய்திட ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அணுகி பயன் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் (பொறுப்பு), வேளாண்மை வணிகம் துணை இயக்குனர் சீனிராஜ், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் ஆனந்தன், திட்ட மேலாண்மை கவிமுகில், சாரன், நகர்ப்புற ஊரக மேம்பாட்டு திட்ட அலுவலர் சாகுல் ஹாமித், ஊரக புத்தாக்க திட்டம் நித்தியானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- புதியதாக மாற்றி தருவதாக மோசடி
- பொதுமக்கள் மன்னிப்பு வழங்கி விடுவித்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுனில் கடந்த சில மாதங்களாக வாலிபர் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று அங்குள்ள காலாவதியான அழகு சாதன பொருட்களை பெற்றுக்கொண்டு புதியதாக மாற்றி தருவதாக ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அரக்கோணத்தில் மொத்த அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் குடோனுக்கு சென்ற வாலிபர், அங்கிருந்த பெண்ணிடம் பழைய அழகு சாதன பொருட்களை கொடுத்தால் புதிய பொருட்கள் கொடுப்பதாக தெரிவித்தார்.
இதை உண்மை என நம்பிய பெண் பழைய அழகு சாதனப் பொருட்களை சேகரித்து தனது மேஜையில் வைத்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த பையில் அழகு சாதனை பொருட்களை நிரப்பி எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பெண்மணி அவரை பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து வாலிபர் பொதுமக்கள் காலில் விழுந்து இனி திருந்தி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினார்.
பொதுமக்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை கடையில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வந்ததாகவும், மதுவுக்கு அடிமையானதால் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால் இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை போலீசில் ஒப்படைக்காமல் பொதுமக்கள் மன்னிப்பு வழங்கி விடுவித்தனர்.
- உறுதி மொழி ஏற்றனர்
- 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியல் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தண்டபாணி தலைமை தாங்கினார். அரக்கோணம் தாசில்தார்பழனி ராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில்அன்பு பாலம் மூலமாக சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் கே சதீஷ்குமார், ஆர்பி. ராஜா, யூத் சர்வீஸ் இயக்குனர் கஜபதி, பள்ளி ஆசிரியர்கள் ஆர்.மணி, தேசிங்கு, அசோகன், என பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- விபத்து ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த ஓச்சேரி இல் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சித்தஞ்சி சிவ காளி பீடம் அமைந்துள்ள பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண் குவியல்கள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட தார் சாலையை தோண்டி எடுத்து சாலை ஓரம் கொட்டப் பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் சாலை குறுகலாக உள்ளதால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கல் அங்கு வரும்போது விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
பலமுறை அப்பகுதி மக்கள் எடுத்துச் சொல்லியும் அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மெத்தனம்காட்டுகிறது. மேலும் விபத்துகள் ஏர்படாமல் தடுக்க அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






