என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Application collection camp was held."

    • 2 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
    • 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் தொழிலதிபர் ஆகிட பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் திட்ட விளக்கவுரை மற்றும் விண்ணப்பம் திரட்டல் முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஆகியோரின் அறிவுரைப்படி, 2 நாட்கள் இத்திட்டத்தின் சிறப்பு விழிப்புணர்வு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வேளாண்மை விலை பொருட்களை மதிப்பு கூட்டி புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் மற்றும் ஏற்கனவே தொழில் செய்வோர் தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்த இத்திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியத்துடன் கூடிய மூலதன கடன் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் வ

    ிளை விக்கும்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோர்கள் உருவாக்கிட இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வேளாண்துறை சார்பில் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விலைப் பொருட்களை வேளாண்மை விற்பனை முறையின் மூலம் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், விலை ஆதாரத்திடம் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்து பயனடையலாம், உற்பத்தி செய்யும் விலை பொருட்களை நல்ல முறையில் விற்பனை செய்திட ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அணுகி பயன் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் (பொறுப்பு), வேளாண்மை வணிகம் துணை இயக்குனர் சீனிராஜ், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் ஆனந்தன், திட்ட மேலாண்மை கவிமுகில், சாரன், நகர்ப்புற ஊரக மேம்பாட்டு திட்ட அலுவலர் சாகுல் ஹாமித், ஊரக புத்தாக்க திட்டம் நித்தியானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×