என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரங்கநாதசுவாமி திருக்கோயில் திருப்பாற்கடல்
திருப்பாற்கடல் ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்
- 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
நெமிலி:
ராணிபட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகிசமேத ரங்கநாத ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் பல ஆண்டுகளாக புணரமைக்கப்பட்டு வந்தநிலையில் கும்பாபிஷேவிழா கடந்த 4ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது.
விழாவில் காலை அகல்மஷ ஹோமம், எஜமானர் சங்கல்பம், ஆசார்யரித்வீக்வரணம், புண்யாஹவசனம், அக்னிப்ரதிஷ்டை, முதல்காலபூரணாஹுதி, மறுநாள் (செவ்வாய்கி ழமை) அக்னிபிரணயனம், மஹாசாந்தி ஹோமம், 2ஆம் கால பூரணாஹுதி, புதியவிக்கிரகங்கள் கரிக்கோலம் அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், அக்ஷினமோசனம்,
பஞ்சகவ்யவாசம், ராப்திவாசம.மாஹாசாந்திமஞ்சணனம், பூரணாஹுதி, 3-ம்நாள் (புதன்கிழமை)காலை விஸ்வரூபம் புன்யாஹவசனம், தம்பராதனம் ஹோமம் நிறெவாகமஹா பூரணாஹுதி நடைபெற்றது. யாகசாலைபூஜைகள் முடிவடைந்து மேலதாளங்கள் முழங்க கும்பாபிஷேக கலசங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ராஜகோபுரம், மூலவருக்குப்ரோக்ஷனை, ரங்கநாயகித்தாயாருக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம் செய்யபட்டது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா!கோவிந்தா! என முழங்கியவாறு பக்தியுடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.






