என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
175 பள்ளி வாகனங்கள் ஆய்வு
- அரக்கோணம்-நெமிலி பகுதியில் நடந்தது
- டிரைவர், உதவியாளர்களுக்கு ஆலோசனை
அரக்கோணம் :
அரக்கோணம் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் இயங்கும் 175 வாகனங்கள் அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பேருந்துகளை இயக்கம் ஓட்டுனர்களுக்கும் அதில் உதவியாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பள்ளி வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்களை இறக்கி விடும்போது அவர்களை சம்பந்தப்பட்ட பெற்றோரிடமும் பாதுகாப்பினரிடமோ பத்திரமாக கையில் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாகனத்திற்கும் முன்பக்கம் பின்பக்கம் என 2 சி.சி.டி.வி. கேமராக்கள் கண்டிப்பாக பொருத்தியாக வேண்டும்
பள்ளி வாகனத்திற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கு கடைபிடிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் அந்த வாகனத்தின் மீதும் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்
நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆர்டிஓ பாத்திமா டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பங்கு பெற்றனர்.






