என் மலர்
நீங்கள் தேடியது "Traffic was cut off."
- போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது
- பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை மற்றும் காரணமாக சோளிங்கர் அடுத்த ஆயில் ஏரிக்கரை வழியாக சோளிங்கரில் இருந்து காவேரிப்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலை ஆயில் ஏரிக்கரை நடுவே 6 அடி அகலமும் 60அடி நீளமும் மழையின் காரணமாக விவசாய கிணற்றில் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதனால் அப்போது போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக கிணற்றுக்குள் சரிந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் மேலும் நிரந்தர சாலை அமைப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அப்போது தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு சாலை பகுதியை சீரமைத்தனர். நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சரிந்த சாலை பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மழையில் கரைந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விபத்து பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாவட்ட அமைச்சர் உத்தரவிட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலை சீரமைக்கப்படாதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.






