என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மகாலட்சுமி பாடல்களைப்பாடினர்
    • நெமிலி எழில்மணி முன்னிலையில் நடந்தது

    நெமிலி:

    நெமிலி பாலா பீடத்தில் பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது.

    பீடாதிபதி துணைவியார் நாகலட்சுமி எழில்மணி வரலட்சுமி விரத பூஜையை சிறப்பாக நடத்தி பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிப் பெண்களுக்கு நோன்பு கயிறு, வழங்கி ஆசி வழங்கினார்.

    பாலாபீட நிர்வாகி மோகன்ஜி அனைவரையும் வரவேற்று அன்னை பாலா அருட் பிரசாதம் வழங்கினார். அனைவரும் மகாலட்சுமி பாடல்களைப்பாடி வழிபட்டனர்.

    • வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    பாணாவரம் பிள்ளையார் கோவில் தெரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வினோத்குமார் (என்கிற) வினோத் (வயது 32) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

    • ரூ.5 லட்சம் மதிப்பிலான கட்ைடகள் பறிமுதல்
    • அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு வனசரகர அலுவலகத்திற்கு உட்பட்ட பாணாவரம் காப்புகாடு பகுதியில் நேற்று வனத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காப்பு காட்டு பகுதியில் மரம் வெட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது கும்பல் செம்மரத்தை துண்டுகளாக வெட்டிக்கொண்டிந்தனர். வன ஊழியரகளை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஒடினர். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் பிடிபட்டார்.

    அவர் திருத்தணி தாலூக்கா தாடூர் கிராமம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(46) என்பது தெரியவந்தது அவரை கைது செய்தனர்.வெட்டி கடத்த முயன்ற 17 செம்மர கட்டைகளை பறிமுதல் யெ்தனர். இதன் மதிப்பு ரூ.5லட்சம் என வனதுறையினர் தெரிவித்தனர்.

    2014-ம் ஆண்டு பாணாவரம் காப்புகாடு பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தும் போது இதே நபர் கைது செய்யப்பட்டார்.

    இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவித்தார். இனிவரும் காலங்களில் காப்புகாடு பகுதிகளில் அத்துமீறி நுழைவோர் மீதும் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தார்.

    • பிஞ்சி சுற்றுலா பணியை சிறப்பாக முடிக்க உத்தரவு
    • கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மேலும் புதிய திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் எந்த இடத்திலும் இல்லாத வ ண்ணம் ராணிப்பேட்டையில் சிறப்புடன் நடக்க வேண்டும். ராணிப்பேட்டை பிஞ்சி சுற்றுலா பணியானது பெரிய அளவிலான சிறப்பு திட்டமாகும்.

    இந்த பணியை தரமான நிறுவனத்திடம் கொடுத்து சிறப்புடன் செய்யப்பட வேண்டும். திட்டப் பணிகள் தேவைகள் குறித்த திட்ட ஆவணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் வார்டுகளில் பல்வேறு பணிகள் சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    எல்லா வார்டுகளிலும் கவுன்சிலர்கள் பணிகள் அனைத்தும் முடித்து தரப்படும் என்றார்.இதில் ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர மன்றத் துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி நகர செயலாளர் பி.பூங்காவனம் மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்,மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் குமார்,முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது
    • உரிமையை பறிக்க கூடாது என அறிவுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஞ்சாயத்து யூனியன் குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் மேலும் தலைவர்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது எனவும் அவர்கள் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு முழுமையாக தெரியும்.

    எனவே பஞ்சாயத்து தலைவர்களின் உரிமையை பறிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடி மாத திருவிழாவையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    இதில் இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் காலையில் அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது மாலை நேரத்தில் இளைஞர்கள் அலகு குத்தியும் முதுகில் முல்குத்தி வண்டி இழுத்தல் மற்றும் அந்தரத்தில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவித்தல் போன்ற நேர்த்திக் கடனை செய்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பானிபூரியில் அட்டைப்பூச்சி
    • உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார்நகரில் ஆற்காடு - ஆரணி சாலையில் ஒருவர் பானிபூரி விற்று வருகிறார்.

    அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழைந்தைக்கு ஊட்டினார்.

    அப்போது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது போன்று அஜாக்கிரதையாக செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆற்காடு உணவுத்துறை அதிகாரி கந்தவேல் நேரில் சென்று பார்வை விட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவு தயாரிப்பு பாதுகாப்பு சான்று மற்றும் சுகாதார சான்று வழங்கவில்லை பானிபூரி உரிமையாளர் பழனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் உணவுத்துறை அதிகாரி கந்தவேல் தெரிவித்தார்.

    • ஆடி 3-ம் வெள்ளியையொட்டி நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடி 3-ம் வெள்ளி முன்னிட்டு பால் கூட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

    கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ படவேட்டமனுக்கு பக்தர்கள் காப்பு கட்டி இன்று பாலாற்றங்கரையிலிருந்து கரகம் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், தொப்பை செட்டி தெரு, வாலாஜா எம்பிடி ரோடு வழியாக கச்சால நாயக்கர் தெரு வந்து கீழ்பட வேட்டம்மன் ஆலயத்திற்கு வந்து அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

    பின்னர் மாலை 4 மணியளவில் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும். நிகழ்ச்சியினை நாட்டாமைத்தாளர்கள், ஜூரிகள், பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

    • கத்தியை காட்டி மிரட்டினார்
    • போலீசார் விசாரணை


    Ranipettai News Youth arrested for extorting money from worker







    அரக்கோணம்:

    நெமிலி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வெளியூர் செல்வதற்காக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு நின்று இருந்த வாலிபர் ஒருவர் பாலாஜியை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்றார்.

    இதுகுறித்து வாலாஜா அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பணம் பறித்துச் சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கண்ணன் (36)என்பதும் இவர் பாலாஜியை மிரட்டி பணம் பறித்தவர் என்பதும் தெரிந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய பட்டிருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மோதியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெகதீசன்(22) திருமணம் ஆகாதவர். இவர் தந்தைக்கு துணையாக கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீசன் சென்னசமுத்திரம் கிராமத்தில் இருந்து பைக்கில் ஆற்காடு நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    சென்னையிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு ஆற்காட்டை நோக்கி வேன் வந்தது.

    ஜெகதீசன் சென்ற பைக் மீது வேன் மோதியது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • 2 பேர் காயம்

    நெமிலி:

    நெமிலி அடுத்த கடப்பாக்கம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 30) மற்றும் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பினர். பைக்கை அசோக் ஓட்டி வந்தார். பனப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசோக்கின் தந்தை நெமிலி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பின்னாவரம் ஊராட்சி, சேந்தமங்கலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெற்றது. வருவாய் கோட்டாச்சியர் பாத்திமா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அரக்கோணம் வட்டாச்சியர் பழனிராஜன் உடனிருந்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு மனுநீதி முகாமில் முதியோர் உதவித்தொகை புதிய ஸ்மார்ட் கார்ட் பட்டா மாற்றம் போன்றவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    ×