என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • 661 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

    ஆற்காடு:

    அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆற்காடு நகராட்சியில் உள்ள 6 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 661 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    ராஜா கோடு துவக்கப்பள்ளி, நகராட்சி முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் துவக்க பள்ளி, கிளைவ் பஜார் துவக்கபள்ளி, தோப்புக்கனா வடக்கு மற்றும் தெற்கு பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் இத்திட்டம் முதற்கட்டமாக தற்போது செயல்படுத்தப்பட்டள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 பள்ளிகளில் பயிலும் 661 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்படி காலை 7.00 மணி முதல் 8 மணிக்குள்ளாக சமையல் கூடத்திலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு உணவு விநியோகம் நடைபெறும் எனவும் அதன் பின்பு 8.45 மணிக்குள்ளாக மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தலா ஒரு மாணவனுக்கு 150 முதல் 200 கிராம் வீதம் உணவு மற்றும் 60 கிராம் காய்கறியுடன் கூடிய காலை உணவு ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்தினை அமைச்சர் காந்தி தோப்புக்கனா வடக்கு பள்ளி வளாகத்தில் இன்று துவக்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டதோடு மாணவர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.

    முன்னதாக மாசாப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் மொத்த சமையல் கூடத்திலிருந்து பள்ளிகளுக்கு உணவு ஏற்றி செல்லும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன், எம்.எல்.ஏ மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன்,மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முஹம்மத் அமீன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ) கணேசன், மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் அசோக், வருவாய் ஆய்வாளர் பாரதி,கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 5 முகங்களுடன் காட்சி தரும் அம்மன்
    • தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் முதன் முதலாக ஒரே கல்லில் 5 அடி உயரத்தில், 4அடி அகலத்தில் வராஹி, காளி, சூலினி, பகுளாமுகி, திரிபுரபைரவி என 5 முகங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு கோவில் அமைந்துள்ளது.

    நேற்று மாலையில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு வராஹி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைச்சல் பெருக, காரிய தடைகள் விலக, சகல தோஷங்களிலிருந்து விடுபட, கண்திருஷ்டி விலகவும், சத்ரு உபாதைகள் விலகவும், மகாலஷ்மி கடாட்சம் கிடைக்கவும், குடும்ப நிம்மதி போன்றவை உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பஞ்சமுக வராஹி அம்மனை வணங்கி தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • ராணிப்பேட்டையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், மின் கண்டன உயர்வை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை ஏழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.எல்.விஜயன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலா ஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதால், தங்களது கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென கூறி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த ஊரிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்காக ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ் வாலாஜாப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முசிறி, சென்னசமுத்திரம், தென்கடப்பந்தாங்கல், வள்ளுவம்பாக்கம் பெல்லியப்பா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வருவதால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ்சினை விஷாரம் வரை இயக்க வேண்டும் மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் வாலாஜா பேட்டை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • ஜி.பி.எஸ். கருவி மூலம் மீட்பு
    • மடக்கி பிடித்து அடி உதை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் இவரது மகன் ராஜ்குமார் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது பைக்கை பெரும்புள்ளிப்பாக்கம் பங்கு கடை அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப் போது பைக்கை மர்ம கும்பல் திருடி சென்றனர்.

    அதில் ஜி.பி.எஸ். பொறுத்திருந்தார். இதனால் ராஜ்குமார் பைக் எந்த வழியாக செல்கிறது என பார்த்து தனது நண்பர்களுக்கு தகவலை அளித்துள்ளார். அதன்படி அவர்கள் சென்று பைக்கை திருடி சென்றவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

    பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவலூர் போலீசார் அண்ணன் தம்பியான ஏழுமலை மற்றும் சீனிவாசன் ஆகியோரை மீட்டுபாணாவரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.30லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
    • கலெக்டர் வழங்கினார்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கே.வேளூரில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    ஆற்காடு அடுத்த கே.வேளூரில் ஒழலை, கரிவேடு, கரிக்கந்தாங்கல், கிளாத்தாங்கல் ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிமுகாம் கேவேளூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர் தாரகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஊராட்சி மன்றத்தலைவர் வளர்மதி நந்தகுமார், துணை தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் வரவேற்றனர். முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர், ஆதரவற்றோர் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான உதவித்தொகை, தென்னங்கன்றுகள் தீவனச்சோளவிதைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    முகாமில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, மாற்றுதிறனாளிகள்ஆகிய துறைகள் சார்பில் 168 பயனாளிகளுக்கு ரூ.30லட்சத்து 80ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், சமூக ஆர்வலர் கே.வேளூர் ராமன், கிராம உதவியாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி மாலை அணிவிப்பு
    • நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் விசி.மோட்டூரில் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வினோத் காந்தி, ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெற்றோரை இழந்த குழந்தைகள் தவிப்பு
    • டிரைவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    நெமிலி, செப்.14-

    காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் விஜய் பாபு (41) அவரது மனைவி அனுசுயா (37) மகன் முகேஷ் (13) சோபியா (9) மகள் ஆகியோர் தனது பைக்கில் பனப்பாக்கம் நோக்கி சென்றனர்.

    அப்போது முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோயது. இந்த விபத்தில் விஜய் பாபு சம்பவ இடத்திலேயே தலை துண்டித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் அவரது மனைவி அனுசுயா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் எழும்பூர் ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    அனுசுயா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    அவர்களின் 2 குழந்தைகள் தாய், தந்தையை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

    அவலூர் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • விளையாடிய போது விழுந்தது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் குமரேசன் ( வயது 30 ) . கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி சித்ரா ( 25 ) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

    இதில் 3 - வது குழந்தை சஞ்சனா விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சனாவை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சஞ்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழையால் வேகமாக நிரம்பி வருகிறது
    • 15 கிலோ எடைவரை மீன்கள் உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பக்கம் ஏரி தமிழகத்தின் 3-வது பெரிய ஏரி என்ற பெருமை கொண்டதாகும் இந்த ஏரியில் நீரின் கொள்ளளவு கடகடவென உயர்ந்து வருகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே காவேரிப்பக்கம் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.

    ஏரியின் முழு கொள்ளளவான 31.5 அடி உயரத்தை இன்னும் 2 நாட்களில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல சிறிய ஏரிகள் நிரம்பும் விவசாயத்திற்கு தேவையான நீர் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் இருந்து சுமார் 46 ஏரிகளுக்கு கால்வாய் வழியாக நீர் செல்கின்றது.

    தொடர்ந்து ஏரியில் நீர் உள்ளதால் ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இந்த ஆண்டு 10 கிலோ 12 கிலோ 15 கிலோ எடைவரை மீன்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் நல துறையின் மூலம் சிறுபான்மை யினர் உலமாக்கள் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 336 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், முகமது அமீன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) சத்ய பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக இன்று காலை 7 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சைக்கிள் போட்டி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சைக்கிள் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சைக்கிள் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மாணவ- மாணவிகள் 13 வயது, 15 வயது, 17 வயது கொண்ட மாணவர்கள் 5கி.மீ தூரம் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு காசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் பிடிப்பவர்களுக்கு ரூ.250 வீதம் பரிசு தொகையும் தகுதி சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சிப்காட் பெல் ரூட் அக்ராவரம் வழியாக சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.பிரபு மற்றும் மாவட்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ×