என் மலர்
நீங்கள் தேடியது "Cauverypakkam Lake"
- மழையால் வேகமாக நிரம்பி வருகிறது
- 15 கிலோ எடைவரை மீன்கள் உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பக்கம் ஏரி தமிழகத்தின் 3-வது பெரிய ஏரி என்ற பெருமை கொண்டதாகும் இந்த ஏரியில் நீரின் கொள்ளளவு கடகடவென உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே காவேரிப்பக்கம் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.
ஏரியின் முழு கொள்ளளவான 31.5 அடி உயரத்தை இன்னும் 2 நாட்களில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல சிறிய ஏரிகள் நிரம்பும் விவசாயத்திற்கு தேவையான நீர் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் இருந்து சுமார் 46 ஏரிகளுக்கு கால்வாய் வழியாக நீர் செல்கின்றது.
தொடர்ந்து ஏரியில் நீர் உள்ளதால் ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இந்த ஆண்டு 10 கிலோ 12 கிலோ 15 கிலோ எடைவரை மீன்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.






