என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For the first time in the world a 5 feet high 4 feet temple is built on a single stone"

    • 5 முகங்களுடன் காட்சி தரும் அம்மன்
    • தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் முதன் முதலாக ஒரே கல்லில் 5 அடி உயரத்தில், 4அடி அகலத்தில் வராஹி, காளி, சூலினி, பகுளாமுகி, திரிபுரபைரவி என 5 முகங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு கோவில் அமைந்துள்ளது.

    நேற்று மாலையில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு வராஹி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைச்சல் பெருக, காரிய தடைகள் விலக, சகல தோஷங்களிலிருந்து விடுபட, கண்திருஷ்டி விலகவும், சத்ரு உபாதைகள் விலகவும், மகாலஷ்மி கடாட்சம் கிடைக்கவும், குடும்ப நிம்மதி போன்றவை உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பஞ்சமுக வராஹி அம்மனை வணங்கி தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×