என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • இரவில் செல்ல மக்கள் அச்சம்
    • புதிதாக மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை-திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் பாலம் வாழைப்பந்தல் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

    இந்தப் பாலத்தின் வழியாக வாழைப்பந்தல் மன்னார்சாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் பாலத்தின் மேலே பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளது.

    இப்பாலத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கம்பிகள் வெளியே தெரிவதால் அச்சம்
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம் பாக்கம் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

    அந்தத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.

    மழைக்காலத் தில் தொகுப்பு வீடுகளில் வசிக்க அச்சமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அங்குள்ள மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • வீணாக செல்லும் தண்ணீர்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிளை நூலகம் அமைந்துள்ள சாலையில் குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வினியோகம் செய்யும் போது வீணாக வெளியேறி சாலையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையும் பாழாகிறது.

    இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • பராமரிப்புப் பணிகள் நடக்கிறது

    ஆற்காடு:

    வேலூர் மின் பகிர்மான வட்டம், ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • வாலாஜாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது

    வாலாஜா:

    வாலாஜா பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பாமக சார்பில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடந்தது.ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளர் எம். கே. முரளி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ கே.எல். இளவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சாலை மறியலில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு இன்றைக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.இட ஒதுக்கீடு என்பதை ஒதுக்கிவிட்டு இடப்பங்கீடு என்று கூற வேண்டும்‌.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இட ஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுத்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.முதலமைச்சரிடம் இதுகுறித்து போனில் 15 நிமிடம் பேசினேன். எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்.முதலமைச்சர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வீரம் என்பது வன்னியர்களின் ரத்தத்திலே உள்ளது.இனி விவேகத்தோடு செயல்பட வேண்டும்.இந்த மாவட்டம் கருப்பு மாவட்டமாக வரைபடத்தில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வாணியம்பாடியில் இருந்து சைக்கிள் பேரணியாக 120 கி.மீ சைக்கிளில் பயணம் செய்தேன்.

    போராட்ட குணம் என்னை விட்டு போகவில்லை.உலக அளவில் நாம் நடத்திய 7 நாள் சாலை மறியல் போராட்டம் போல் வேறு எதுவும் இதுவரை நடைபெற்றது இல்லை. இது தவிர அனைத்து மக்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

    கோபமும், வீரமும் என்னை விட்டு அகலாது. வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதற்கு நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இன்றைக்கு பெற்று தந்து உள்ளோம். பெண் குழந்தைகளை

    பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்.பெண் குழந்தைகளை பார்த்தாலே நீங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. இட ஒதுக்கீட்டில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் எஸ்.பி. சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் ராஜா, மாநில சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் வக்கீல் சக்கரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல், வக்கீல் ஜானகிராமன், பகவான் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் சபரி கிரிசன், வாலாஜா மத்திய ஒன்றிய தலைவர் குமார், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார், வாலாஜா நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆத்திம் பாஷா, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளரும், செங்காடு ஊராட்சி மன்ற தலைவருமான தேவேந்திரன், வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆற்காடு வன்னியர் சங்க தலைவர் லட்சுமணன் மாவட்ட அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன்.

    வன்னியர் சங்க வாலாஜா நகர செயலாளர் ஜானகிராமன், இளைஞர் அணி பிரபாகரன், வன்னியர் சங்க ஆற்காடு நகர செயலாளர் வி பிரபாகரன், வாலாஜா மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா நகர செயலாளர் ஞானசேகரன் நன்றி கூறினார். முன்னதாக ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    • தலைவலியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் சவுமியா (வயது 22). பிளஸ் 2 படித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாகவே ஒற்றைத் தலைவலால் அவதிப்பட்ட வந்த சவுமியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அதில் எந்த பலனும் இல்லாததால் அடிக்கடி தலைவலிப்பதாக பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது
    • பயணிகள் அவதி

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ெரயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோ ணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    குறித்த நேரத்திற்கு ெரயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.

    • மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
    • கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபாடு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அருளாணைப்படி, பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் 72 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம் போன்ற பல்வேறு வகையான ஹோமங்களும், மோடியின் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம், விருச்சிக லக்னம் என்ற பெயரில் மகா சங்கல்பம் செய்யப்பட்டு அதற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.

    மேற்கண்ட ஹோமத்தின் பிரசாதம் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்
    • போலீசார் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி தீபாசத்யன் முன்னிலையில் நேற்று இரவு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    இதனையடுத்து எஸ்.பி. தீபா சத்யன் பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி விற்பனையை தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் விஸ்வேஸ்வரய்யா (மாவட்ட தலைமையகம்) முத்துக்கருப்பன் (சைபர் கிரைம்) டிஎஸ்பிக்கள் பிரபு (ராணிப்பேட்டை), பிரபு (அரக்கோணம்), இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், சதீஷ்குமார், தனஞ்செழியன், சீனிவாசன், விஜயலட்சுமி, சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட இந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பல்பொருள் அங்காடியில் காவலர்கள் தீயணைப்பு துறை சிறைத்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பல் பொருட்களை வாங்கி பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 144-வது பிறந்தநாள் விழா
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், அம்மூர் பேரூராட்சி துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை, ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, குமார் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    குறித்த நேரத்திற்கு ரெயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு, திமிரி, கத்தியவாடி, ஆணைமல்லூர், தாமரைபாக்கம், புதுப்பாடி, சென்னலேரி மற்றும் கலவை ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    மேலும் திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர் ( ஒரு பகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி, சின்னகுக் குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், கலவை, வளையாத்தூர், பாப்பேரி ( ஒரு பகுதி ), மேச்சேரி, சென்னசமுத்திரம், குட்டியம், அரும்பாக்கம், கே.வேளூர், டி.புதூர், கணியனூர், நல்லூர், மேல்நெல்லி, கலவை புத்தூர், பின்னத்தாங்கல், மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×