பெரியார் சிலைக்கு அமைச்சர் காந்தி மாலை அணிவிப்பு

144-வது பிறந்தநாள் விழாஏராளமானோர் கலந்து கொண்டனர்
அம்மூர் அடுத்த சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
அம்மூர் அடுத்த சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், அம்மூர் பேரூராட்சி துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை, ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, குமார் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com