என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் ஆலோசனை
    • அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு இறுதி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனான‌ கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 1.9.22-ந் தேதி வரை வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.இப்பட்டியல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னா ர்வ லர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள், எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குச்சாவடி பட்டியலில் மாற்றங்கள் செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை கிராமம், பாகம் எண் 181 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஆனது அதை பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிட அறைக்கும் மாற்றம் செய்யப்படுகிறது.

    சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமம், பாகம் எண்கள் 246, 247 மற்றும் 248 ஏற்கனவே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி என இருந்ததை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாகம் எண் 248-ல் பிரிவுகளின் (தெரு) பெயர்கள் ஒரே மாதிரியாக இடம் பெற்றிருந்ததை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு நகரம் பாகம் எண்கள் 149, 150, 151 அரசு மாதிரி பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பாகம் எண் 149 அருகில் உள்ள ஜானகிராமன் பூங்கா அங்கன்வாடி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாகம் எண்கள் 150 மற்றும் 151 ஆகியவை அருகில் உள்ள சி.அப்துல் ஹக்கீம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.வேளூர் கிராமம், பாகம் எண் 234 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சா வடியில் 2 தெருக்கள் மட்டும் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் அதே பள்ளி வளாகத்தில் உள்ள பாகம் எண் 233- க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஆற்காடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பாகம் எண்கள் 141, 142, 143, 144, 145, 146 ஆகியவற்றின் பெயர்கள் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்பதை சி.அப்துல் அக்கீம் அரசினர் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி என திருத்தம் செய்யப்ப ட்டுள்ளது.

    திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இறுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1122 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சா வடி விவரங்கள் குறித்து ஆட்சேபனைகள் ஏதும் உள்ளதா? என அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் பட்டியலை அங்கீகரித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி மலைக்கு இயக்கப்படும்
    • பழுதாகாத பஸ்சை இயக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலைக்கு திருப்பத்தூர் பகுதியில் இருந்து காலை 9 மணி அளவில் நிலாவூருக்கு வரும் அரசு பஸ் பழுதடைந்ததால் நேற்று மதியம் 12 மணிக்கு வந்துள்ளது. 3 மணிக்கு வரவேண்டிய அரசு பஸ்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதுபோன்ற பழுதாகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

    இதனை சரிசெய்ய பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது .

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீரில் ஒழுகாத அடிக்கடி பழுதாகாத பஸ்சை ஏலகிரி மலைக்கு இயக்கவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறை தீர்வு கூட்டம் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம், நெமிலி உள்ளடக்கிய அரக்கோணம் வருவாய் கோட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், தாசில்தார்கள் பழனி ராஜன், ரவி, பேரூராட்சி செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது நெல் கொள்முதல் நிலையங்களை அரசு தனியார் விட இருப்பதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. தனியாருக்கு விட்டால் அவர்களிடம் நெல்லை அளித்தால் எங்களுக்கு பணம் வருமா, மேலும் அவர்கள் சரியான எடையுடன் சரியான தரத்துடன் நெல்லை விவசாயிகளிடம் மட்டுமே வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம்.

    நெல் கொள்முதல் நிலையம்

    இதனால் நெல் வணிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களின் நெல் வாங்கப்படும் நிலை நீடிக்கும். எனவே நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு விடக்கூடாது என்றார். அரக்கோணத்தில் உள்ள வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கிடங்கு நகரில் இருந்து தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.

    இந்த அலுவலகத்திற்குச் செல்லும் வழிகளை சீரமைத்து சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் வேளாண் அலுவலகம் செல்லும் வழி என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    கொசுத்தலை ஆற்றில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பணி பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதிக்கு வர வேண்டிய நீர் வராமல் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    தண்டலம் கிராமப் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.

    இது சம்பந்தமாக வனத் துறையினர் காட்டுப் பண்றிகளை நுழைய விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பாமக உழவர் பேரியக்க தலைவர் திருமால், பாமக மாநில மாணவச் சங்க செயலாளர் பிரபு ஆகியோர் பேசியதாவது:-

    தங்களது பகுதியில் ஆடுகள், கோழிகள் அதிக அளவில் திருடு போகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் பொதுமக்களாகிய நாங்களே 5 பேர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். தற்போதும் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரக்கோணத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ரமேஷ் பேசுகையில் வேலூர் கிராமத்து ஏரியிலிருந்து மதகு மூலம் வெளியேறும் நீர் வெளியேறும் வழி தூர்வாரப்படாததால் ஒரே பக்கமாக செல்கிறது.

    இதனால் நீர் செல்லும் பக்கத்தில் அதிக தண்ணீர் வரத்தால் 250 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சூழல் உள்ளது. எதிர்பக்கம் 250 ஏக்கர் நிலம் நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • உணவின் தரம் குறித்து சோதனை
    • மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சம்பத் நேற்று ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பித்தல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்.

    இதனைத்தொடர்ந்து பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டிற்குச் சென்று முறையாக மருந்துகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறதா மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதித்த பின்னர் மருந்துகள் வழங்கப் படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நோயாளிகள், பொதுமக்கள் அவதி
    • மாவட்ட நிா்வாகம் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை 2006-ம் ஆண்டு 30 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்ய தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை என்ற பெருமை கொண்டது.

    மேலும் 2007-ம் ஆண்டு 30 யூனிட்வரை ரத்தம் சேமிப்பு வங்கியும் தொடங்கப்பட்டது. 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறந்த பிரசவத்திற்கான தமிழக அரசின் விருதைப்பெற்றது. இங்குள்ள மருத்துவமனையால் இப்பகுதியை சுற்றியுள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை சோ்ந்த ஏழை எளிய மக்கள் கர்பிணிகள், குழந்தைகள், விவசாயிகள் கூலி தொழிலாளா்கள் என பலரும் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்துள்ளனா்.

    ஆனால் இன்று போதிய டாக்டர்கள் இல்லாததாலும், கா்பிணிகள் அறுவை சிகிச்சை இங்கு செய்யாததாலும் முறையான சிகிச்சையின்றி கா்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனா்.

    அதேபோல் இங்குள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவ பிரிவுகள் இருந்தும், மருத்துவ கருவிகள், மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அதற்கான மருத்துவா்கள், முறையான தொழில்நுட்புனா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக நோயாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

    அதேபோல் இப்பகுதியை சுற்றி விவசாயமே பிரதானமாக விளங்குவதால் விவசாயிகள் நிலங்களில் பணி செய்யும் தொழிலாளா்கள் எதிா்பாரத விதமாக பூச்சு, பாம்பு ,தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் கடிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனா். அப்படி வருபவா்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் சோளிங்கா் மற்றும் வாலாஜாபட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றனா் அப்படி போகும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர முடியாமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே சம்பந்தபட்ட துறையினரும், மாவட்ட நிா்வாகமும், உடனடியாக இந்த மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தேவைகளை நிறைவேற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ சேவையை செய்திட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலர்களும் எதிா்பார்கின்றனா்.

    • முழுகொள்ளளவை எட்டியது
    • 75 சதவீத ஏரிகள் நீராதாரத்தைப் பெறும்

    ராணிப்பேட்டை:

    தமிழகத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட திருவள்ளூர் மாவட்டம் செம்ப ரம்பாக்கம் ஏரி, செங் கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை அடுத்து 3 - ஆவது பெரிய ஏரி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியாகும்.

    இந்த ஏரியின் மொத்தப் பரப்ப ளவு 3,968 ஏக்கர். பருவமழைகாலங் களில் இந்த ஏரி முழுக் கொள்ள ளவை எட்டினால், முப்போகம் பயிர் சாகுபடி செய்யலாம். இந்த ஏரியின் முழுக் கொள் ளளவு 30.65 அடி.

    சமீபத்தில் பெய்த பரவளான மழை, பாலாற்று வெள்ளத்தால் ஏரியின் பாதுகாப்பு அளவான 29.1 அடியை நேற்று காலை எட்டியது.

    அதாவது மொத்த நீர் கொள்ளள வான 1,474 கன அடியில் 1218 கன அடியை எட்டியது . இதைத் தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி நரி மதகு, சிங்கமதகு, மூல மதகு, பள்ள மதகு உள்ளிட்ட மொத்தம் உள்ள 26 மதகு களில் இருக்கும் 56 கண்களில் 30 மதகுகளை பொதுப்பணித்துறையினர் காலை திறந்து விட்டனர். இவற்றில், விநாடிக்கு 93 கன அடி நீர் ஏரியில் இருந்து வெளியேறுகி றது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 42கன அடியாக உள்ளது.

    இந்த ஏரியின் நீர் வெளியேறி மகேந்திர வாடி ஏரி, பெருவளையம், சிறுவளையம், தர்மநீதி, துறையூர், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம் , புன்னை ஆகிய ஏரிகளை அடைய உள்ள நிலையில், இந்த ஏரிகள் ஏற்கெனவே நிரம்பி கடைவாசல் வழியேநீர் வெளியேறும் நிலையில் உள்ளன.

    இதில், மகேந்திரவாடி ஏரியில் இருந்து தற்போது கடைவாசல் வழிந்து நீர் வெளியேறுவதால், தொடர்ந்து பாலகிருஷ்ணாபுரம் ஏரி, மேலேரி ஏரி, கீழ்வீதி ஏரி, பெரப்பேரி ஏரி ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டிவருகின்றன.

    காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி நீர் வெளியேற்றப்படுவதால், ராணிப்பேட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஏறக்குறைய 75 சதவீத ஏரிகள் நீராதாரத்தைப் பெறும்.

    இந்த நிலையில், நெமிலி வட்டத்தில் உள்ள விவசாயிகள் ஏரி நிரம்பியதால், தங்களது நிலங் களில் விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டனர்.

    • குண்டர் சட்டத்தில் ெஜயிலில் அடைத்தனர்
    • ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் மேலும் நடவடிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த சில மாதங்கள் முன்னர் கை கால்கள் வெட்டப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது சம்பந்தமாக எஸ்பி உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. பிரபு தலைமையில் பாணாவரம் போலீசார் எஸ்.ஐ. பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த வினோத்குமார் வீராணம் கிராமத்தை சேர்ந்த சரவணன் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லூயி அரசன் ஆகியோர் கைது செய்து குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரும் பானாவரம்அடுத்த வீராணம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (33) ஆகியோர் குண்ட ர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களிடம் ெதாடர்பில் இருந்ததால் நடவடிக்கை
    • எஸ்.பி. உத்தரவு

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களிடம் போலீசார் சிலருக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பந்தப்பட்ட போலீசாரின் செல் போன் அழைப்புகளை எஸ்பி தனி பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

    இதனை தொடர்ந்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டு ரமேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று உத்தரவிட்டார்.

    • அம்மூர் பகுதியை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    வாலாஜாபேட்டை:

    வாலாஜாவை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 50). கூலித் தொழிலாளி.

    இவர் வாலாஜா டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    அப்போது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமநாதனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள்
    • 71 பேர் நேர்காணலில் தேர்வு ெபற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருந்து 3 மாணவிகள், சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 4 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் பாபு தலைமை தாங்கினார். ஹுண்டாய் மோட்டார் நிறுவனத் தின் (ஐஎம்சி) தலைவர் செந்தில் குமார், ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கண்காணிப்பு அதிகாரி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக வாலாஜா அரசு சித்தா மருத்துவர் சுகன்யா, மருத்துவமனை வட்டார அலுவலக 112 நபர்களுக்கு பட்டம் வழங்கினர்.

    மேலும், 2020-2022 கல்வியாண டில் 2 ஆண்டு காலம் பயிற்சியில் பிட்டர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக், பெயின்டர் (ஜென்ரல்), ஒயர்மேன், ஓஏஎம்டி மற்றும் ஓராண்டு காலத்தில் வெல்டர் பிரிவிலும் என மொத்தம் 112 நபர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதில் வேலைவாய்ப்பு நேர்காணலில் வேலை 71 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் எலெக்ட்ரீஷியன் பிரிவை சேர்ந்த 3 மாணவிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாடி, சென்னை டிவிஎஸ் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் பாபு தெரிவித்தார்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மயானத்தில் வளர்ந்த புதர்கள் அகற்றம்

    ஆற்காடு:

    ஆற்காட்டில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில்விடு முறை நாட்களில் தூய்மை பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

    மாநகரங்களில் தூய் மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் அரசு விடுமுறை நாட்களில் மாதம் ஒரு நகரம், மாநகரங்களில் தமிழகமுழுவதும் 10,000 சாலை பணியாளர்கள் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலை பாலாற்றங்கரை யில் உள்ள மயானத்தினை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சாலை பணியாளர்கள் சங்க மாநில தலை வர் சண்முகராஜா தலைமை தாங்கினார்.

    மாநிலத் துணைபொதுச் செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் ஏழுமலை, பாண்டுரங் கன், மாநில செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டனர்.

    இதில் ஆற்காடு நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி

    கோட்ட பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து ஆற்காடு உட்கோட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோவிந்தராஜூலு, சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட

    சாலை பணியாளர்கள் அங்குள்ள புதர் மண்டி கிடந்த மயானத்தை தூய் மைப்படுத்தி செடி, கொடிகளை அகற்றி அப்புறப்ப டுத்தினார்கள்.

    இதேபோல் அரசு விடுமுறை நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கண்ட தூய்மைப் பணிகள் நடைபெறும் என சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி
    • அதிகாரிகள் சீர் செய்ய வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா மின்னல் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பு, அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது.

    நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்சுகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. அதேபோல் நெமிலி தாலுகா மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை படுமோசமாக உள்ளது.

    நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமப்படு கின்றனர். மேற்கண்ட 2 இடங்களில் சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×