என் மலர்
ராணிப்பேட்டை
- விறகு எடுக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் பைரவா காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி.
இவருடைய மகள் வகிதா. பாணாவரத்தில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டிற்கு விறகு எடுத்து வருவதற்காக அப்பகுதியில் உள்ள காய்ந்து போன மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பாணாவரம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக வகிதா மீது ேமாதியது.
இதில் கை, கால் துண்டான நிலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 29-ந் தேதி நடக்கிறது
- பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிர ச்சிள் களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- 2பேர் கைது
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ஆந்திராவிற்கு கடத்தி செல்வதற்காக லாரியில் எடுத்து வரப்பட்ட 23 டன் ரேசன் அரிசி ர் பறிமுதல் செய்தனர்.
சென்னை பூந்தமல்லியிலிருந்து ஆந்திராவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குடிமை பொருள் குற்றப்பிரிவு புலானாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் ரில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி பரிசோதனை செய்ததில் லாரி முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக லாரியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் போலீசார், ரேசன் அரிசி மூட்டைகளை அளவீடு செய்தனர். இதில் சுமார் 23 டன் மதிப்பிலான ரேசன் அரிசி மூட்டைகளை ஆந்திராவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமு ஆகிய 2 கைது செது விர நடத்தி வருன்றனர்.
- சிகிச்சைபெற்று வந்தநிலையில் பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வேலம் வாணிய தெருவை சேர்ந்தவர். தாயார் கெங்காபாய் (வயது 65). கெங்காபாய் தினமும் உடல்நிலை முன்னேற்றத்திற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
கடந்த 19ந் தேதி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை அருந்தியுள்ள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த கெங்காபாயை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை கீழ்படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (32). பொக்லைன்எந்திர டிரைவர்.இவருக்கும் கச்சாலநாயக்கர் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் 5ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட சண்டையில் கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
பல மாதங்களுக்கு பின்பு தனது மனைவி விஜயலட்சுமியை மீண்டும் சேர்ந்து வாழ அழைப்பதற்காக, அசோகன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு நேற்று சென்றார்.அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சண்டையில் விஜயலட்சுமியின் தம்பி மணிகண்டன் (எ) விஜயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நேற்று இரவு வாலாஜா அய்யப்பன் கோவில் அருகே அசோகன் சென்ற போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்டன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அக்காவின் கணவரான அசோகனை, சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற குழு அலுவலக கட்டிடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, பவித்ரா சசிகுமார், மங்கையர்கரசி சுப்பிரமணி, சுந்தரம்மாள் பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மாலதி கணேசன், காந்திமதி பாண்டுரங்கன், தனராஜ், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் தொகுதிக்கு ஒன்று வீதம் பெரிய அளவில் சமுதாய கூடம் அமைக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் ஆலோசனையின்படியும் சிறப்பு திட்டத்தின் கீழ் நான்கு சமுதாய கூடம் ஒதுக்கி தரவும், அதற்கான நிதியினை பெறுவதற்கான வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியரன் மூலம் மேற்கொள்வது.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தின் நடுவே ஏரி கால்வாய் உள்ளது. அப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு மக்கள் விவசாயம் செய்வதால் விவசாபிகளின் நலம் கருதி பொதுப்பணித்துறை மூலம் கல்வெட் அமைத்து தர வேண்டியும்.
மேலும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பகுதிகளில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளது. எனவே வேகா மங்கலம் முதல் 11 கிராம சாலைகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்சாலையாக மேம்படுத்தி தர கோருவது, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பெல் தொழிற்சாலை நிறுவனத்திற்கு லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் ஊராட்சிகளிலிருந்து 1000 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலங்களுக்குள் அரசு புறம்போக்கு நிலம் உள்ளடங்கி இருப்பதால் இந்த 4ஊராட்சிகளிலும் அரசின் பொதுவான திட்டங்கள் (கட்டிடம், விளையாட்டு மைதானம்) செயல்படுத்த இடம் இல்லாததால் பெல் நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 10 ஏக்கர் நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ள மன்ற அங்கீகாரம் கோடுவது என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.
- விவசாயிகள் மகிழ்ச்சி
- தண்ணீர் வெளியேறுவது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மகேந்திரவாடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரம்மாண்டமான ஏரி நிரம்பி தண்ணீர் வெளியே றுகிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக விருந்த ளிக்கிறது.
காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து செல்லும் நீர் மகேந்திர வாடி ஏரிக்கு செல்வதால் ஏரி முழுவதும் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது.
முழு கொள்ளளவை எட்டிய மகேந்திரவாடி ஏரியிலிருந்து கடை வாசல் வழியாக நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது
இந்த காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் நிறுத்தி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் இந்த மகேந்திரவாடி ஏரி அருகே கரையில் மதகு காத்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. மற்றொரு சிறப்பம்சமாகும்.
கோவிலின் அருகிலேயே கடை வாசல் பகுதி தண்ணீர் வெளியேறுவது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. மேலும் விவசாயத்திற்கு தேவையான நீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பசுமை குழு கூட்டம்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பசுமை குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் அரசு திட்ட பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டிட பகுதிகளை விரிவுபடுத்துதல், நிலமாற்றம் செய்யும் போது அந்த இடத்தில் உள்ள பச்சை மரங்களை உரிய அனுமதி பெற்று அகற்றுவது குறித்தும், மரங்கள் அகற்றுவது மாற்றாக இரண்டு மடங்கு மரக்கன்றுகளை மாற்று இடத்தில் நடுவதற்காக வழங்கப்படும் ஒப்புதல் ஆணைகள் மற்றும் குழு அமைத்தல் வழங்கப்படும் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திண்டிவனம் அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் உள்ள மரங்களை அகற்றிட குழு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சோளிங்கர் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் இடம், திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள தற்போதைய இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் இடம், சோளிங்கர் நகராட்சி புதிய எரிவாயு தகனமேடை அமைக்கும் இடம், சென்னை பெங்களூர் விரைவு பாதைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களை அகற்றிட குழு ஒப்புதல் வேண்டி வரப்பெற்ற கடிதங்கள் மீது விவாதிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேல் செடிகள் உற்பத்தி செய்து மரக்கன்றுகள் நடப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் சம்பந்தப்பட்ட துறைகளின் பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், இவ்வின மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவ்வினத்தை சேர்ந்த ஆண், பெண் 10 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக வழங்கப்படும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தேர்ந்தெடுத்தல் அவசியம். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் இவ்வினத்தை சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்துவோர் 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்.
சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விடுவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்ப்பதற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய மின்னணு பலகை பொருத்தப்படும். அதன்படி தகுதியானவர்கள், இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0416-2242547 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்றனர்
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவுப்படி, திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பஸ் படிக்கட்டுகளில் அபாயகர மாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திமிரி பஸ் நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத் தின் போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ - மாணவிகள் கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- 50 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் கீழ்விஷாரம் குளத்துமேடு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






