என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைமை ஜெயந்தி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
பெல் நிறுவனம் மூலம் 4 ஊராட்சிக்கு தலா 10 ஏக்கர் நிலம் பெற நடவடிக்கை
- 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற குழு அலுவலக கட்டிடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, பவித்ரா சசிகுமார், மங்கையர்கரசி சுப்பிரமணி, சுந்தரம்மாள் பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மாலதி கணேசன், காந்திமதி பாண்டுரங்கன், தனராஜ், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் தொகுதிக்கு ஒன்று வீதம் பெரிய அளவில் சமுதாய கூடம் அமைக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் ஆலோசனையின்படியும் சிறப்பு திட்டத்தின் கீழ் நான்கு சமுதாய கூடம் ஒதுக்கி தரவும், அதற்கான நிதியினை பெறுவதற்கான வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியரன் மூலம் மேற்கொள்வது.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தின் நடுவே ஏரி கால்வாய் உள்ளது. அப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு மக்கள் விவசாயம் செய்வதால் விவசாபிகளின் நலம் கருதி பொதுப்பணித்துறை மூலம் கல்வெட் அமைத்து தர வேண்டியும்.
மேலும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பகுதிகளில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளது. எனவே வேகா மங்கலம் முதல் 11 கிராம சாலைகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்சாலையாக மேம்படுத்தி தர கோருவது, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பெல் தொழிற்சாலை நிறுவனத்திற்கு லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் ஊராட்சிகளிலிருந்து 1000 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலங்களுக்குள் அரசு புறம்போக்கு நிலம் உள்ளடங்கி இருப்பதால் இந்த 4ஊராட்சிகளிலும் அரசின் பொதுவான திட்டங்கள் (கட்டிடம், விளையாட்டு மைதானம்) செயல்படுத்த இடம் இல்லாததால் பெல் நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 10 ஏக்கர் நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ள மன்ற அங்கீகாரம் கோடுவது என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.






