என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்



    சோளிங்கர்:

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அமிர்த வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், வண்ண மலர் கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பக்தோசிதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி தங்க கேடயத் திலும் , தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தளினார்கள். தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கம்
    • 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    அரக்கோணம்:

    தனியார் துண்டு நிறுவனம் சார்பாக பழங்குடி இன பெண்களுக்கான நிலம், வீடு மற்றும் வாழ்வாதாரம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் அரக்கோணம் டவுன் ஹால் மண்டபத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு இயக்குனர் சாமுவேல் பீட்டர் தலைமை தாங்கினார். அன்னை தெேரசா கிராம வளர்ச்சி நிறுவன செயலர் ஐ.டி.தேவ ஆசிர்வாதம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் பங்கேற்று அரசு திட்டங்கள் குறித்து பேசினார். எந்த நேரத்திலும் உங்களுக்காக நான் பணி செய்ய காத்திருக்கிறேன்

    கல்வி மட்டுமே உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஆயுதம் அதை உணர்ந்துகொண்டு பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி கிளாரா ஆகியோர் பங்கேற்று பெண்கள் குழந்தைகள் கொத்ததடிமை முறை குழந்தை திருமணம் குடும்ப வன்முறை போன்ற பாதுகாப்பு நலன் குறித்து பேசினார்கள். அரசு மருத்துவர் ஷோபனா பங்கேற்று பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சிக்கு பேராசியர் முனைவர் கலைநேசன் வீரகுமார் ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் கவுதம் தாட்கோ சமூக பாதுகாப்பு சாசி.சந்தர் ஆனைப்பாக்கம் அம்பிரிஷிபுரம் அரிகலபாடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களும் கலைமணி தமிழ்வாணன், ஜெயராஜ், சாம்ராஜ் பால்ராஜ், அருண்பிரசாத் குணசேகரன் முருகேசன் மங்லாபுரம் வில்லியம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். அரக்கோணம் சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்றனர்.

    நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன செய்திருந்தார்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • 1 கிலோ 200 கிராம் போதைபொருள் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மிட்டபேட்டை கிராமப் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    அப்போது மிட்டபேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் பெருமாள்ராஜ பேட்டை பகுதியை சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர் (வயது 29), சூர்யா (25) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

    • திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் . சிப்காட் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சவுமியா (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்களே ஆகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சவுமியா திடீரென படுக்கை அறையில் துப்பட்டா வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அறிவிப்பு
    • வேளாண்மை துணை இயக்குனரை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. தினமும் சராசரியாக ரூ.12 லட்சம் மதிப்புள்ள 30 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த உழவர்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    2022-23 - ம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை யில் உழவர் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி மாலை நேரங்களிலும் உழவர் சந்தைகள் முழு வீச்சில் செயல்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை மற்றும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

    மாலை நேர உழவர் சந்தையானது மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாலை நேர உழவர் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவ சாயிகள் , உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ராணிப் பேட்டை, வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) அணுகி தனி அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம் .

    இந்த சந்தைகள் தொடங்கப்பட்டதும் நுகர் வோர்கள் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பெற முயற்சி
    • 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு

    நெமிலி:

    தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பொதுமக்களிடம் வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்தனர்.

    அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு பணத்தை திருப்பி தரவில்லை என புகார்கள் வந்த தால் ஆருத்ரா நிதி நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோர் நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் திரட்டி வழங்கி உள்ளனர்.

    இவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பெற முயற்சித்தனர்.

    அப்போது, நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோரை முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நிதி நிறுவன மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத் தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமை யாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வீதி பகுதியில் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வருட கோரிக்கையாக இருந்த கிளை நூலகம் அமைக்கும் திட்டத்தை சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர் அவர் உடனடியாக கிளை நூலகம் அமைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி கீழ் வீதி கிராமத்தில் சட்ட உறுப்பினர் பொது நிதியிலிருந்து 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது அதனை முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார்.

    அப்போது நெமிலி ஒன்றிய துணைச் சேர்மன் தீனதயாளன் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • இளம்பெண்ணை கடத்திய வழக்கில் நடவடிக்கை
    • பள்ளி மாணவருக்கும் தொந்தரவு கொடுத்தார்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனி ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற அருள் (வயது 29). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 6 - ம்தேதி அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவின் போது, 6 - ம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் இவர் மீது இளம்பெண்ணை கடத் தியதாகவும் வழக்கு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரது குற்ற செயல்களை கட்டுபடுத்தும் பொருட்டு ராஜ்குமார் என்ற அருளை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி ராஜ்குமார் என்ற அருளை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    • பனை விதைகள் நடுவதால் ஏரியில் நீர் வளம் பெருகும்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கலவை:

    பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் "பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக அளவில் நாட்டு ரக மரக்கன்றுகளை நடுவதாகும். எனவே ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட வேண்டும்.

    மேலும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்ய வேண்டும். இதனால் ஏரியில் நீர் வளம் பெருகும். பனை விதை நடவு செய்பவர்களுக்கு அரசு உதவி புரிகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், தாசில்தார் சமீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷாநவாஸ், ஜெயஸ்ரீ, வனக் காவலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.

    • 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்
    • மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் இன்று பசுமை தமிழகம் நோக்கி சென்னையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு அடையும் வகையில் மாவட்டம் முழுவதும் நடும் வகையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி பகுதியில் மரக் கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சார்பில் சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு சோனியா அகாடமி நிர்வாகி மற்றும் தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் ஐ.ஆஞ்சி தலைமை தாங்கினார். ஏ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இவ்விழாவில் சோனியா அகாடமி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ெரயில் நிலையம் அருகில் ெரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவமனையில் ஏராளமான ெரயில்வே ஊழியர்கள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர் ஆனால் இங்கு போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் சரிவர பார்ப்பதில்லை எனவும் மருந்துகள் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

    இந்நிலையில் மருத்துவமனையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கண்டித்து இன்று அகில இந்திய எஸ்சி எஸ்டி ெரயில்வே தொழிற்சங்க அரக்கோணம் கிளை சார்பாக ெரயில்வே மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட ெரயில்வே ஊழியர்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் ெரயில்வே மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து கோஷமிட்டனர்.

    மருத்துவமனை சிறப்பாக இயக்க வேண்டும். வரும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் கொடுக்க வேண்டும் போதுமான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் போதுமான மருந்துகள் இல்லை எனக் கூறி நோயாளிகளை அைலகழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்கத்தின் செயலாளர் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார் பொருளாளர் வெங்கடேசன் துணைத்தலைவர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 29-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம்
    • பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணைப்படி, வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை மறு சீரமைத்தல் தொடர்பாக பதிவுத்துறை தலைவருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்ட தன்தொட ர்ச்சியாக ராணிப்பேட்டை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணிப்பேட்டை பதிவு மாவட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, கலவை சார்பதிவாளர் அலுவலகங்களை பொறுத்து வருவாய் வட்ட தலைமையிடம் அடிப்படையில் அவற்றோடு இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராமங்கள் விவரங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பதிவு கிராம எல்லைகளை மறு சீரமைத்து மாற்றி அமைப்பது குறித்தும், தற்போது இயங்கி வரும் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தினை பொறுத்து நிர்வாக நலன் கருதி அரக்கோணம் தெற்கு குறு வட்டம் மற்றும் பள்ளூர் குறுவட்டத்திற்கு கட்டுப்பட்ட பதிவு கிராமங்களை உள்ளடக்கி தக்கோலம் பேரூராட்சி இணை தலைமை இடமாகக் கொண்டு புதிய சார் பதிவாளர் அலுவலகம் தோற்றுவிப்பது குறித்தும் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×