என் மலர்
நீங்கள் தேடியது "இங்கு போதுமான மருத்துவர்கள் இல்லை"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ெரயில் நிலையம் அருகில் ெரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் ஏராளமான ெரயில்வே ஊழியர்கள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர் ஆனால் இங்கு போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் சரிவர பார்ப்பதில்லை எனவும் மருந்துகள் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கண்டித்து இன்று அகில இந்திய எஸ்சி எஸ்டி ெரயில்வே தொழிற்சங்க அரக்கோணம் கிளை சார்பாக ெரயில்வே மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ெரயில்வே ஊழியர்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் ெரயில்வே மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து கோஷமிட்டனர்.
மருத்துவமனை சிறப்பாக இயக்க வேண்டும். வரும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் கொடுக்க வேண்டும் போதுமான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் போதுமான மருந்துகள் இல்லை எனக் கூறி நோயாளிகளை அைலகழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் செயலாளர் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார் பொருளாளர் வெங்கடேசன் துணைத்தலைவர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






