என் மலர்
ராணிப்பேட்டை
- 1 கிலோ 300 கிராம் போதை பொருள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த நிலையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முட்பதரில் பதுக்கி கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 43 பேர் காப்பீடு திட்டத்தில் பதிவு
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 68 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
43 பேருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 61 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 65 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆந்திராவிற்கு கடத்திய போது சிக்கியது
- 5 பெண்களிடம் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரேசன் அரிசி, போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நேற்று காலை திருத்தணி ரெயில் நிலைய பிளாட்பாரங்கள், அங்கு வந்து சென்ற ரெயில்களில் சோதனை நடத்தினர்.
ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 5 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிக்னல் கோளாறால் விபரீதம்
- 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
மேலும் 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்ட பிறகு 40 நிமிடம் தாமதமாக இந்த ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. தொடர்ந்து சிக்னல் கோளாறு இல்லாமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- 2½ டன் சிக்கியது
- வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான்ஷெரிப் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வின்சன்ட் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அன்வர்திகான்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரெயிலில் கடத்துவதற்காக மேற்கண்ட ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் மறைத்து வைத்திருந்த ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர் . தொடர்ந்து நேற்று காலை மைசூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தபோது போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட 86 மூட்டைகள் கொண்ட 2½ டன் ரேசன் அரிசியை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- அதிகமான தண்ணீர் வரத்தால் மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு அதன் கிளை ஏரிகளான பாசனம் பெறும் ஆலப்பாக்கம், கன்னிகாபுரம், மாகாணிப்பட்டு, துரை பெரும்பாக்கம், உத்திரம் பட்டு, புதுப்பட்டு, கருணாவூர் போன்ற கிராமத்தில் உள்ள மக்கள் காவேரிப்பாக்கம் ஏரி நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து துறை பெரும்பாக்கம், ஆலப்பாக்கம், மகானிப்பட்டு செல்லும் கால்வாயில் காங்கிரீட் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் அடுக்கி தடுத்தனர்.
ஆனாலும் அதிகமான தண்ணீர் வரத்து இருப்பதால் மணல் மூட்டையில் அடித்து செல்லப்பட்டு ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் பணப்பாக்கம் காவேரிப்பாக்கம் வழியாக செல்லும் மதகில் தண்ணீர் செல்வதால் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் மதகு வழியாக தண்ணீர் வீணாகிறது.
எனவே காவேரிப்பாக்கம் ஏரிநிரம்பியும் அதன் கிளை ஏறிகளில் தண்ணீர் செல்லாமல் இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எனவே உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் கட்டி அந்த கால்வாயில் தண்ணீர் வீணாகாமல் அதனை சரி செய்யக் கோரி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- சுவரில் துளையிட்டு துணிகரம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற் பார்வையாளராக நந்த குமார் பணிபுரிந்து வருகிறார்.
விற்பனை யாளர்களாக தனஞ் செழியன் , ஏழுமலை ஆகியோர் வேலை பார்க்கிறார்கள் . நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் டாஸ் மாக் கடை பூட்டி விட்டு வீட்டிற்கு சென் றுள்ளனர்.
பின்னர் நேற்று மதியம் விற்ப னையாளர்கள் பேரும் ரண்டு கடையை திறக்க வந்த போது கடையின் பின் பக்கத்தில் மர்ம நபர் கள் துளையிட்டு திருட முயற்சிசெய்தது தெரியவந்தது . இத னையடுத்து விற்பனை யாளர்கள் கடையை ஆய்வு செய்த போது கடையில் 38 பீர் பாட்டில்கள் உடைத்து நொருக்கப்பட்டிருந் மதுபாட்டில்கள் திருட்டு போகவில்லை.
இது தொடர்பாக மேற்பார்வையாளர் நந்தகுமார் அவளூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
மேலும் 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்ட பிறகு 40 நிமிடம் தாமதமாக இந்த ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. தொடர்ந்து சிக்னல் கோளாறு இல்லாமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- குடும்ப தகராறில் அம்மிக்கல்லை போட்டு தனது கணவரை கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
- தந்தை இறந்துவிட்டார் தாய் கைதானார். இதனால் அந்த குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் மகன் சீராளன் (வயது 35) இவருடைய மனைவி ஷோபனா (30) தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சீராளன் ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார்.
சீராளனுக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஷோபனா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சீராளனின் தலையில் போட்டார்.
தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.தரையில் சரிந்து விழுந்த சீராளன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷோபனா அங்கிருந்து தலைமறைவானார். அவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அப்போது குடும்ப தகராறில் அம்மிக்கல்லை போட்டு தனது கணவரை கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீராளன், ஷோபனாவின் மகன், மகள் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
தந்தை இறந்துவிட்டார் தாய் கைதானார். இதனால் அந்த குழந்தைகள் தவித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது
- எஸ்.பி. ஆபீசில் புகார்
ராணிப்பேட்டை:
ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் நேற்று தேநீர் அருந்து வதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன் (10), ரூபன் (7), மற்றும் ஜான்சன் (9) ஆகிய 3 பேர் (சாண்வெட்ஜ்) ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்றதும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக 3 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு பேக்கரியில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உணவு தயார் செய்யும் இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் ரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடையிலிருந்த (சாண்ட்வெஜ்) மற்றும் இதர உணவு பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு பேக்கரியை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர்.
- கலெக்டர் தகவல்
- 25 அலகுகள் ஏற்படுத்த அரசாணை வெளியீடு
ராணிப்பேட்டை:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற் காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இவ்வினத்தை சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.






