என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பொதுமக்கள் மனு வழங்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மறுசீரமைப்பு குறித்த கருத்து கேட்புகூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அரக்கோணம் அலுவலகத்தை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை, காவேரிப்பாக்கம், ஆகிய 8 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கீழ் 325 கிராமங்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த 8 சார் பதிவாளர் அலுவலகங்களை 6 சார்பதிவாளர் அலுவலகங்களாக குறைத்து மறு சீரமைப்பு செய்வது குறித்த பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வட்டங்கள் வாரியாக சார் பதிவுகளை மேற்கொள்ள இணைக்கப்பட்ட உள்ள கிராமங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தற்போது அரக்கோணம் பெரியவட்டம் என்பதால், அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதியதாக தக்கோலம் சார் பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரக்கோணம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர்தெரிவித்தார்.

    இதேபோன்று மற்ற அனைத்து வட்டங்களிலும் உள்ள பகுதிகள் இணைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது, இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் மக்கள் மனுக்களாக வழங்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்லையா, மாவட்ட பதிவாளர் வாணி மற்றும் சம்பந்தப்பட்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையின் பிரதான தெருக்களிலும், சாலையின் ஓரங்களிலும் இரு புறமும் 4 சக்கர தள்ளு வண்டிகள், பயணிகள் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் தட்டிக் கேட்டால் வாகன ஓட்டிகள் மிரட்டுகின்றனர். மக்களின் அதிருப்தியை போக்க வேண்டிய போலீசார், கண்ட இடங்களில் சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • நவராத்திரி 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் நவராத்திரி 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது.

    நான்காம் நாள் உற்சவம் முன்னிட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி அமிர்தவல்லி தயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி தங்க கேடயத்திலும் அமிர்தவல்லி தாயார் சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் திருக்கோவில் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.

    இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 5 ஊழியர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சி பகுதியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு புலிவலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வன்னியவேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45), வாங்கூரை சேர்ந்த வெங்கடேசன் (63), வாலாஜா கே.கே. நகரை சேர்ந்த தனசேகரன் (53), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (52) ஆகியோர் கூலிவேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று கம்பெனியில் உள்ள ரூ.4 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி வேனில் ஏற்றி செல்ல முயன்றனர்.

    அதனை பாதுகாப்பு பணியில் இருந்த ரமேஷ் என்பவர் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து வாகனத்தை சோதனை செய்த போது ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து கொண்டபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு
    • கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (ராணிப்பேட்டை) தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    இதனை யொட்டி நேற்று ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், முரசொலிமாறன் ஆகியோரது உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வீசி.மோட்டூர் பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அமைச்சர் காந்திக்கு திமுக வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஏ.வி. சாரதி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 9ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை அருகே திருத்தணி தெற்கு வீதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமி (வயது 14) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் தூங்கியதால் வரலட்சுமி பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த பெற்றோர் வரலட்சுமியை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மணமுடைந்த வரலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட பெற்றோர் உடனடியாக வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரலட்சுமி இறந்தது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நண்பர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற நாகரத்தினம் (வயது 40). அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பகவான்(37) இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பகவான் சேட்டை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சேட்டு பீர்பாட்டிலை உடைத்து பகவான் வயிற்றில் குத்தி உள்ளார்.

    இதில் நிலைகுலைந்து ரத்தம் கொட்டிய நிலையில் பகவான் கீழே விழுந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பகவானை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கம் 59 கிராம், வெள்ளி 93 கிராம் இருந்தது
    • 15-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் எண்ணப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் , யோக ஆஞ்சநேயர் கோவிலும் நகருக்குள் பக்தோசிப்பெருமாள் கோவிலும் உள்ளது .

    இந்த கோவில்களுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர் .

    இந்த நிலையில் பக்தர்கள் கோவில்களில் வைக்கப்பட் டுள்ள 15 - க்கும் மேற்பட்ட உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.

    இதில் ரொக்கமாக ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் , தங்கம் 59 கிராம் , வெள்ளி 93 கிராம் இருந்தது இவை திருக்கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் உதவி ஆணையர் நித்யா , திருக்கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் , ஆய்வர்கள் திலகர், பிரியா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நரசிங்க ராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பாணாவரத்தை சேர்ந்தவர்
    • உடல் இன்று கொண்டுவரப்படுகிறது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம் பாக்கத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில் இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சங்கீதாவும் மகன்களும் பாணாவரம் திடீர் நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலம் கோபால்பூரில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. அவரது உறவினர்கள் கோபால் பூர் விரைந்தனர்.

    கோபால் பூர் போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் கோபாலபூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து சசிகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த சசிக்குமாரின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பாணாவரத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    • மிலாடி நபியை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 2, 9-ந் தேதிகளில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.

    அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • நகராட்சி ஆணையர் லதா தலைமையில் ஆலோசனை கூட்டம்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் ஏற்கனவே உள்ள மார்கெட் கட்டிடத்தை இடித்து ரூ.9 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடைகள் கட்டப்பட்டு காய், பழங்கள், இறைச்சி, பூக்கள் விற்பனை செய்ய வணிகர்களுக்கு 194 கடைகள் வாடகை விடப்பட்டது. மேலும் 64 நபர்கள் பல ஆண்டுகளாக அனுமதியின்றி திறந்த வெளியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த கடைகள் பராமரிப்பின்றி தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் தமிழக அரசு ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 இருசக்கர வாகன நிறுத்துமிடம், கேன்டீன், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய வணிக வளாகத்தில் 231 கடைகளை கட்ட திட்டமிட்டுள்ளது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நடைபெற்றது.

    இதில் நகரமன்ற தலைவர் லட்சுமி நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பெண் வியாபாரி ஒருவர் பழைய கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு தற்போது சிறிது சிறிதாக அதிலிருந்து மீண்டு வருகின்ற வேலையில் கடைகளை இடித்தால் நான் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • போலீசாரிடம் கணவர் அடித்து துன்புறுத்துவதாக புகார் ெசய்தார்
    • வேறு யாருக்காவது தொடர்பா? விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன் (வயது 38) ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஷோபனா (30) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. ஷோபனா கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். தக்கோலம் போலீசார் ஷோபனாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஷோபனா போலீசாரிடம் கூறியதாவது;-

    எனது கணவர் சீராளனுக்கு நாடகத்தில் நடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அடிக்கடி நாடகம் தொடர்பாக வெளியூருக்கு சென்று விடுவார். அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததால் நான் அவரை கண்டித்தேன்.

    ஆனால் அவர் கள்ள தொடர்பு கைவிடவில்லை. அடிக்கடி மது குடித்துவிட்டு இரவில் கொடுமைப்படுத்துவார். நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு கள்ளக்காதல் தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார்.ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் உளுந்தையில் உள்ள எனது தாய் வீட்டிற்குச் சென்றேன்.

    கொலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மப்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என புகார் அளித்தேன்.

    இது குறித்து அவர்கள் தக்கோலம் போலீசிருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நேரத்தில் கொலை நடந்ததை அறிந்த தக்கோலம் போலீசார் என்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த கொலையில் ஷோபனாவிற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×