என் மலர்
நீங்கள் தேடியது "Liquor licenses can be revoked if sold in violation"
- மிலாடி நபியை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 2, 9-ந் தேதிகளில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.






