என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ரெயில்களில் சோதனை நடத்தினர்"

    • ஆந்திராவிற்கு கடத்திய போது சிக்கியது
    • 5 பெண்களிடம் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரேசன் அரிசி, போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நேற்று காலை திருத்தணி ரெயில் நிலைய பிளாட்பாரங்கள், அங்கு வந்து சென்ற ரெயில்களில் சோதனை நடத்தினர்.

    ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 5 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×