என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
- 2½ டன் சிக்கியது
- வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான்ஷெரிப் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வின்சன்ட் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அன்வர்திகான்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரெயிலில் கடத்துவதற்காக மேற்கண்ட ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் மறைத்து வைத்திருந்த ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர் . தொடர்ந்து நேற்று காலை மைசூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தபோது போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட 86 மூட்டைகள் கொண்ட 2½ டன் ரேசன் அரிசியை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.






