என் மலர்
நீங்கள் தேடியது "They blessed the devotees"
- மகாளய அமாவாசையை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அமிர்த வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், வண்ண மலர் கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தோசிதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி தங்க கேடயத் திலும் , தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தளினார்கள். தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






