என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்டம் முழுவதும் நட வேண்டும்"
- 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்
- மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் இன்று பசுமை தமிழகம் நோக்கி சென்னையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு அடையும் வகையில் மாவட்டம் முழுவதும் நடும் வகையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி பகுதியில் மரக் கன்றுகள் நட்டு வைத்தார்.
இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சார்பில் சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு சோனியா அகாடமி நிர்வாகி மற்றும் தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் ஐ.ஆஞ்சி தலைமை தாங்கினார். ஏ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
இவ்விழாவில் சோனியா அகாடமி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






