என் மலர்
நீங்கள் தேடியது "மிட்டபேட்டை பஸ் நிறுத்தம் பகுதி"
- ரோந்து பணியில் சிக்கினர்
- 1 கிலோ 200 கிராம் போதைபொருள் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மிட்டபேட்டை கிராமப் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது மிட்டபேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் பெருமாள்ராஜ பேட்டை பகுதியை சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர் (வயது 29), சூர்யா (25) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






