என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய நூலகம்
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வீதி பகுதியில் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வருட கோரிக்கையாக இருந்த கிளை நூலகம் அமைக்கும் திட்டத்தை சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர் அவர் உடனடியாக கிளை நூலகம் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி கீழ் வீதி கிராமத்தில் சட்ட உறுப்பினர் பொது நிதியிலிருந்து 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது அதனை முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது நெமிலி ஒன்றிய துணைச் சேர்மன் தீனதயாளன் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story






