என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers union representatives are ready to respond to grievances."

    • 29-ந் தேதி நடக்கிறது
    • பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிர ச்சிள் களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×