ராணிப்பேட்டையில் 3 போலீசார் சஸ்பெண்டு

கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களிடம் ெதாடர்பில் இருந்ததால் நடவடிக்கை எஸ்.பி. உத்தரவு
ராணிப்பேட்டையில் 3 போலீசார் சஸ்பெண்டு
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களிடம் போலீசார் சிலருக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பந்தப்பட்ட போலீசாரின் செல் போன் அழைப்புகளை எஸ்பி தனி பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டு ரமேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com