என் மலர்
நீங்கள் தேடியது "The cement road is shifting and the gravel is scattered"
- வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி
- அதிகாரிகள் சீர் செய்ய வலியுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகா மின்னல் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பு, அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது.
நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்சுகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. அதேபோல் நெமிலி தாலுகா மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை படுமோசமாக உள்ளது.
நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமப்படு கின்றனர். மேற்கண்ட 2 இடங்களில் சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






