என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலையில் கைதான 2 பேர் கைது
- குண்டர் சட்டத்தில் ெஜயிலில் அடைத்தனர்
- ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் மேலும் நடவடிக்கை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த சில மாதங்கள் முன்னர் கை கால்கள் வெட்டப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது சம்பந்தமாக எஸ்பி உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. பிரபு தலைமையில் பாணாவரம் போலீசார் எஸ்.ஐ. பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த வினோத்குமார் வீராணம் கிராமத்தை சேர்ந்த சரவணன் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லூயி அரசன் ஆகியோர் கைது செய்து குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரும் பானாவரம்அடுத்த வீராணம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (33) ஆகியோர் குண்ட ர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






