என் மலர்
உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3 மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு
- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள்
- 71 பேர் நேர்காணலில் தேர்வு ெபற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருந்து 3 மாணவிகள், சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 4 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் பாபு தலைமை தாங்கினார். ஹுண்டாய் மோட்டார் நிறுவனத் தின் (ஐஎம்சி) தலைவர் செந்தில் குமார், ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கண்காணிப்பு அதிகாரி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக வாலாஜா அரசு சித்தா மருத்துவர் சுகன்யா, மருத்துவமனை வட்டார அலுவலக 112 நபர்களுக்கு பட்டம் வழங்கினர்.
மேலும், 2020-2022 கல்வியாண டில் 2 ஆண்டு காலம் பயிற்சியில் பிட்டர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக், பெயின்டர் (ஜென்ரல்), ஒயர்மேன், ஓஏஎம்டி மற்றும் ஓராண்டு காலத்தில் வெல்டர் பிரிவிலும் என மொத்தம் 112 நபர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் வேலைவாய்ப்பு நேர்காணலில் வேலை 71 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் எலெக்ட்ரீஷியன் பிரிவை சேர்ந்த 3 மாணவிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாடி, சென்னை டிவிஎஸ் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் பாபு தெரிவித்தார்.






