என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • ராணிப்பேட்டையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், மின் கண்டன உயர்வை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை ஏழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.எல்.விஜயன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×