என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast program for 6 schools in the municipality"

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • 661 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

    ஆற்காடு:

    அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆற்காடு நகராட்சியில் உள்ள 6 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 661 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    ராஜா கோடு துவக்கப்பள்ளி, நகராட்சி முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் துவக்க பள்ளி, கிளைவ் பஜார் துவக்கபள்ளி, தோப்புக்கனா வடக்கு மற்றும் தெற்கு பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் இத்திட்டம் முதற்கட்டமாக தற்போது செயல்படுத்தப்பட்டள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 பள்ளிகளில் பயிலும் 661 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்படி காலை 7.00 மணி முதல் 8 மணிக்குள்ளாக சமையல் கூடத்திலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு உணவு விநியோகம் நடைபெறும் எனவும் அதன் பின்பு 8.45 மணிக்குள்ளாக மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தலா ஒரு மாணவனுக்கு 150 முதல் 200 கிராம் வீதம் உணவு மற்றும் 60 கிராம் காய்கறியுடன் கூடிய காலை உணவு ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்தினை அமைச்சர் காந்தி தோப்புக்கனா வடக்கு பள்ளி வளாகத்தில் இன்று துவக்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டதோடு மாணவர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.

    முன்னதாக மாசாப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் மொத்த சமையல் கூடத்திலிருந்து பள்ளிகளுக்கு உணவு ஏற்றி செல்லும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன், எம்.எல்.ஏ மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன்,மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முஹம்மத் அமீன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ) கணேசன், மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் அசோக், வருவாய் ஆய்வாளர் பாரதி,கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×