என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • போக்குவரத்து பாதிப்பு

    சோளிங்கர்:

    சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலையில் புத்தேரி அருகே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பழமை வாய்ந்த புளியமரம் கிளை ஒன்று திடீரென முறிந்து அப்பகுதியில் நின்ற மின்கம்பம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மின்கம்பம் தேசமடைந்து நெடுஞ்சாலை குறுக்கே விழுந்தது.

    இதனால் சோளிங்கர் வாலாஜா போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பு துண்டித்தனர். நெடுஞ்சாலை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான பணியாளர்கள் விபத்துக்குள்ளான புளியமரக்கிளையை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 1 கிலோ கஞ்சா பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த பள்ளூர் கிராமம் வாராகி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன்.இவரது மகன் தணிகை வேல் (59). இவர் அதே பகுதியில் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப் படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று பிற்பகல் எஸ்பி தீபா சத்யன் பள்ளூர் கிராமத்தில் உள்ள தணிகைவேலின் கடையில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது‌ கடையின் மேல் கூரையில் இருந்து பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றார்.

    • மாடிப்படி ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ் புரா சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ம் தேதி இரவு வீட்டின் மாடிபடிக்கட்டில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

    ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் கொண்டாபுரம் பகுதியில் விவசாயம் செய்து அதே இடத்தில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பசுக்களுக்கு உணவு அளித்துவிட்டு கொட்டகையில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    மீண்டும் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 3 பசுக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் பசுக்கள் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பசுக்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 2.5 கிலோ போதைபொருள் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த முருகன் (எ) ரஜினி முருகன் (27) அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாபு (31).

    இவர்கள் இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது ரஜினிமுருகன், அருண்பாபு இருவரும் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த அரசங்குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வீர பாண்டியன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வீர பாண்டியன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து நேற்று கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடல் மிதப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் இறந்த நபர் வீரபாண்டியன் என்பது தெரியவந்தது.

    உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல்

    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். விசாரணையில் அவர்கள் மாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது22), சர்மா (25), வாலாஜ வை சேர்ந்த தருண் (20) என்பதும் இவர்கள் கடந்த 5-ந் தேதி இரவு தனியார் கல்லூரி முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் சீட் கவரில் இருந்து ஒரு செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாலிபர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்காடு போலீசார் அதிரடி
    • லாரி டிரைவரிடம் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே வெளிமாநிலத்தி ற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள ஆனைமல்லூர்

    கிராமத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளிமாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டு இருப்ப தாக திமிரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதல் நிலை காவலர் விஜயகுமார், தனிப்பிரிவு காவலர் பாஸ்கரன், காவலர் சிலம்பரசன், ஆகிய போலீசார் அங்கு சென்று சோதனை யிட்டனர்.

    அப்போது லாரியில் கடத்திச் செல்வதற்கு தயாராக வைத்திருந்த 10 டன் எடை கொண்ட 135 ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரான திமிரியைச் சேர்ந்த சண்முகம் (40) என்பவரை கைது செய்து ராணிப்பேட்டை குடிமைப்பொருள் குற்றப் பிரிவு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத் தனர்.

    அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் குடிமைப் பொருள் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் லாரி மற்றும் ரேசன்அரிசி வாலாஜாவில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    மேலும் லாரி உரிமையா ளர் மற்றும் டிரைவரான சண்முகத்திடம் எங்கிருந்து ரேஷன் அரிசி வாங்கப்பட்டது, எங்கு கடத்திச்செல்லப்பட உள்ளது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்ப வம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கலெக்டர் பங்கேற்பு
    • 15 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிக்கான ஆணை வழங்கப்பட்டது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக மத்திய மக்கள் தொடர்பு மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் இணைந்து மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை இயக்குனர் காமராஜ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தென்கடப்ப ந்தாங்கல்ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: மத்திய மாநில அரசுகள் இணைந்து மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மத்தியஅரசானது மக்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, இருப்பிடம், சாலை வசதி ஆகியவற்றிற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு அரசும் எத்தனை சதவீதம் சரியாக பயன்படுத்தியுள்ளது என்பதை சரியாக சொல்லும் அளவிற்கு தகவல் தொழில்நுட்ப தொடர்பு வசதி வளர்ந்துள்ளது.

    ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட மத்திய அரசின் திட்டமானது எந்த தலைப்பின் கீழ் எவ்வளவு சதவீதம் நடைபெற்று வருகின்றது என்பதை நாம் இணைய வசதிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மாற்றுத்தி றனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மத்திய மாநில அரசுகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கிராமத்தில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதில் குறிப்பாக மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வீடு கட்டுவதற்கான ஆணை, மாடு வாங்குவதற்கும், விவசாய உற்பத்தி கடன், மாடு கொட்டகை அமைப்பதற்கும் இது போன்ற பல்வேறு திட்டங்கள் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று இருந்தால் நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 சதவீதம் நபர்கள் இரும்பு சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கான நிவாரணி முரங்கைக் கீரையை அனைவரும் உட்கொள்ள வேண்டும்.இதன் மூலம் அனைத்து வித உடல்நல பிரச்சினைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

    நிகழ்ச்சியில் 15 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பில்லான வங்கி கடன் உதவிக்காண ஆணைகளையும், 35 மகளிர்களுக்கு தாட்கோ வங்கியின் மூலம் ரூ.50.75 லட்சம் மதிப்புள்ளான கறவை மாடு வாங்குவதற்கான கடன் உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளையும், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.மேலும் மத்திய அரசின் இந்திய ஆட்சி பணியில் சேர்ந்துள்ள 8 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை, முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆகிய துறைகளின் மூலம் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து திட்ட விளக்கவுரை யாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகம் வேலூர் கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், உள்பட மகளிர் குழுவினர், கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • ஆற்காடு தாழனூரில் விழா நடந்தது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின்வாரிய அலுவலகத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

    ரூ.2.84 கோடியில் புதிய மின்மாற்றி

    மேல்விஷாரம் மின்வாரியஇளநிலை பொறியாளர் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செயல்பட்டுவந்தது. அந்த அலுவலகத்தை மேல்விஷாரம் அண்ணாசாலை சவுக்கார் அப்துல்காதர் தெருவில் பொதுமக்களின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டது.

    இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலக திறப்பு விழாவிற்கு நகர மன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சவுக்கார் முன்னா, நகர மன்ற துணை தலைவர் குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    16 மெகா வாட்டாக உயர்த்தம்

    அதேபோல் ஆற்காடு ஒன்றியம் தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீ்ட்டில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

    இதன் மூலம் ஆற்காடு நகரம், வேப்பூர், மேல்விஷாரம், நந்தியாலம், தாழனூர், முப்பது வெட்டி, தாஜ்புரா கூராம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க முடியும்.

    இந்த விழாவில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் சாந்திபூஷன் இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் பக்தர்கள் குங்குமமிட்டு வழிபாடு
    • அரக்கோணம் கருமாரியம்மன் கோவிலில் நிகழ்ச்சி நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் நேருஜி நகரில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி கொலு நிறைவு மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் விஜயதசமியை முன்னிட்டு சிறுமிகள் அம்மனின் 9 அவதாரங்கள் வேடமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அம்மன் வேடத்திலிருந்த 9 சிறுமிகளுக்கு பெண் பக்தர்கள் மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி,நகர மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, ரஷிதா, நந்தாதேவி, சங்கீதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.

    அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பைக்கில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். விசாரணையில் அவர்கள் மாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது22), சர்மா (25), வாலாஜவை சேர்ந்த தருண் (20) என்பதும் இவர்கள் கடந்த 5-ந் தேதி இரவு தனியார் கல்லூரி முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் சீட் கவரில் இருந்து ஒரு செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாலிபர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×