என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பூஜை பொருட்கள் கடையில் போதைபொருள் விற்றவர் கைது
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் கிராமம் வாராகி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன்.இவரது மகன் தணிகை வேல் (59). இவர் அதே பகுதியில் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப் படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று பிற்பகல் எஸ்பி தீபா சத்யன் பள்ளூர் கிராமத்தில் உள்ள தணிகைவேலின் கடையில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடையின் மேல் கூரையில் இருந்து பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றார்.
Next Story
×
X