என் மலர்
ராணிப்பேட்டை
- 10 ஆண்டுகளாக சரியான பாதை இல்லாததால் மக்கள் அவதி
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இறந்தவர் சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல கடந்த 10 ஆண்டுகளாக சரியான பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
மயான பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ் மற்றும் சோளிங்கர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூரணச் சந்தர்அவர்களிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை ஏற்று மயான பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள் இதனை தொடர்ந்து சோளிங்கர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் அவர்கள் மயான பாதை அமைக்க அப்பகுதியில் ஆய்வு செய்தார். உடனடியாக மயானதை அமைப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கோரிக்கையை நிறைவேற்றிய தந்த மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ், மற்றும் ஒன்றிய செயலாளர் பூரணச் சந்தருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது சோளிங்கர் திமுக வழக்கறிஞர் உதயகுமார் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், ஒன்றிய கழக நிர்வாகிகள் எத்திராஜ், பூபாலன், படைத்தல் திமுக முன்னாள் கிளைச் செயலாளர் தர்மன் கிராம கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது
- ஒன்றியக்குழு துணை தலைவர் பார்வையிட்டு ஆய்வு
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகு தியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் 92 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் மஞ்ச கிணறு தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்தது . ஒன்றியக்குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் சென்று பார்வையிட்டு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு , தற்காலிகமாக மழை நீர் வீடுகளுக்கு செல்லாத வாறு தடுப்பு அமைக்கப்பட்டது .நேற்று 2 - வது நாளாக பலத்த மழை பெய்தது .
- மழை பெய்த போது பரிதாபம்
- 2 மணி நேரம் மின் தடை
அரக்கோணம்:
அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது மகேந்திரன் என்பவரது பசு மாடு அந்த பகுதியில் அறுந்து கிடந்த டிரான்ஸ்பார்மர் மின் வயரில் சிக்கி பரிதாபமாக இறந்தது.
இதனால் அரக்கோணம் நாகாலம்மன் நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் சுமார் 2 நேரத்திற்கு பின் மின் தடையை சரி செய்தனர்.
- சாலையோரங்கள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 66 மி.மீ. மழை பதிவானது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவிரிப்பாக்கம் அரக்கோணம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அம்மூரில் கனமழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆற்காடு, சோளிங்கர், கலவை பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக ஆம்பூரில் 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ராணிப்பேட்டையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
அரக்கோணம்- 38.4, ஆற்காடு-26, காவேரிப்பாக்கம்-66, வாலாஜா-36, அம்மூர்-42, சோளிங்கர்-15, கலவை-12.8.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்
- அமைச்சர் காந்தி இயற்கை எரிவாயுவை ஆட்டோவிற்கு செலுத்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் தமிழகத்தின் முதல் இயற்கை எரிவாயு நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த இயற்கை எரிவாயு நிலையத்தினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிலையத்தில் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை ஆட்டோவிற்கு செலுத்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பதிவு செய்ய தெரியாதவர்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தோட்டக்கலைத் துறையின் மூலமாக மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி பதிவு அவசிய மாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் மூலமாக மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி மூலம் பதிவு செய்ய கட்டாயமா கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
http://www.tnhorticulture.tn.gov.in அல்லது tnhortnet/login.php என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைய வழியில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- கூடுதலாக ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்
- ரெயில் பயணிகள் சங்கத்தினர் மனு
அரக்கோணம்:
சென்னை கோட்ட ரெயில்வே மேலாளரை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுஅளித்தனர்.
அதில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்க வேண்டும்.
அரக்கோணத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பயன் பாட்டிற்கு வராமல் இருக்கும் தானியங்கி நகரும் படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் ரேணிகுண்டாவுக்கும் இடையே மூன்றாவது ரெயில் பாதை யும், அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 2-வது ரெயில் பாதையும் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கூறியதாக ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தெரிவித்தார்.
- தேதி பின்னர் அறிவிக்கப்படும்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் புத்தக கண்காட்சி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கப்படுவதாகருந்தது.
வாசிப்பாளர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் அதிகப்படியான புத்தகங் களை வாங்கி பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிர்வாககாரணங்களால் புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், புத்தக கண்காட்சி தொடங்கப்படும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- பிரதோஷத்தையொட்டி நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப் புஅபிஷேகம் செய்து பூஜையுடன் மகா தீபாரா தனை நடைபெற்றது.
நந்தி பகவானுக்கும் பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்து அருகம்புல் மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை
அரக்கோணம்:
அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத் தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் இச்சிபுத்தூர் மற்றும் சாலை துணை மின் நிலையங்களில் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
அதன் காரணமாக இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் சாலைதுணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தண்டலம், மின்னல், நரசிங்க புரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி,வேடல், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என செயற் பொறியாளர் ஏ.எல்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
வாலாஜா:
வாலாஜா தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதந் தோறும் 2-வது சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம் நடத்தபட்டு வருகிறது.
அதன்படி நேற்று நடந்த முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொது வினியோகம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினர்.
அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சோளிங்கர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சோழிங்க நகராட்சியில் உள்ள கொணடபாளையத்தில் ஒரே குன்றிலான பெரியமலையில் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவில் 1305 படிகளும் அருகே உள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் 406 படிகள் கொண்டது.
கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் 30 நாட்கள் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர் இதை ஒட்டி தினசரி காலையும் மாலையும் மலைக்குச் சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.
இந்த நிலையில் பெரிய மலை அடிவாரத்தில் கோவில் அருகே பக்தர்கள் பயண்பாட்டிற்காக சுகாதாரம் வளாகம் கட்டப்பட்டு பக்தர்களுக்கு பயண்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளது.இதனால் வெளி ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதனால் நகராட்சி நிர்வாகம் பக்தர்கள் நலனுக்காக சுகாதாரம் வளாகம் உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






