என் மலர்
ராணிப்பேட்டை
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- சிறையில் அடைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 74).
அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள் அப்போது சிறுமியிடம் கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- சிறுமி கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை அங்குள்ள தெருவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
- கீழ்தேவதானம் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி (65). இவர் சிறுமி விளையாடி கொண்டிருந்த அப்பகுதிக்கு சென்றார்.
ராணிப்பேட்டை:
சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 7 வயது மகள்.
இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை அங்குள்ள தெருவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழ்தேவதானம் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி (65). இவர் சிறுமி விளையாடி கொண்டிருந்த அப்பகுதிக்கு சென்றார்.
அப்போது சிறுமியிடம் சாரங்கபாணி நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் சாக்லேட் வாங்கி தருகிறேன் கடைக்கு வா என்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமியை சாரங்கபாணி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதபடி தனது வீட்டுக்கு வந்து பாட்டியிடம் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள தனது பெற்றோருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சாரங்கபாணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை
ராணிப்பேட்டை:
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.
மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 55). இவர் வீட்டின் அருகே சொந் தமாக விசைத்தறி எந்திரங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக விசைத்தறி எந்திரங்கள் தீப்பற்றி எரிவதாக அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான விசைத்தறி எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. கேமரா மூலம் சிக்கினார்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர் வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியில் கடையின் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது. இது சம்பந்தமாக அரக்கோணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு இளம் பெண் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அந்த இளம் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரக்கோணம் அடுத்து பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் அவரது கணவருடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
போலீசார் அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
- ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஓய்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட உள்ளிட்ட பல்வேறு பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 மாதங்களில் ரோப்கார் துவக்கப்பட உள்ள நிலையில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் 65 ஆண்டுகளுக்கு பிறகு யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேக நடைபெற உள்ளது.
இத்திருப்பணிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். அப்போது கோவில் உதவி ஆணையர் ஜெயா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பணியிடமாற்றத்தை கண்டித்து கோஷம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு தாலுகா அலுவலகம் வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஷ், செயலாளர் சக்கரவர்த்தி, துணை செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கிராம நிர்வாக அலுவலரின் நிர்வாக பணி காரணமாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டதை கண்டித்தும் மற்றும் உதவி கலெக்டரின் அரசு பணியாளர்கள் விரோத போக்கு கண்டித்தும் மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மவுன நிலையை கண்டித்தும்.
இடம் மாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் பணி மாறுதல் ஆணை ரத்து செய்யக் கோரியும் மீண்டும் அதே இடத்தில் வேலை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வாலாஜா தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமைத் தலைவர் வட்டத் தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.
வட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்ற ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் கோட்டாட்சியரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், அரக்கோணம் உட்கோட்டத்தில் தண்டலம் கிராமத்தில் பணிபுரிந்து வந்த பரிதி இளம்வழுதியை காரணமின்றி நெமிலி தாலுகா சிறுவளையம் கிராமத்திற்கு மாறுதல் செய்ததை கண்டித்தும் மேற்படி ஆணையை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட நிர்வாகத்தின் மவுன நிலை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்க தலைவர் சானு தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் வட்டாரத்துக்குட்பட்ட 39 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 60) பால் வியாபாரி. இவர் நேற்று தேனீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பூபதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 315 ஆசிரியர்கள் பங்கேற்பு
- மாணவர்களின் கற்றல் குறித்து ஆலோசனை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்பேரில் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ வட்டார அளவிலான பயிற்சி அரக்கோணம் ஜோதி நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் உள்ள மையங்களில் வட்டார வள மைய மேற் பார்வையாளர் மனோன்மணி தலைமையில் சுமார் 315 ஆசி ரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சிகள் நடைபெறும் மையங்களை ராணிப்பேட்டை மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் பார்வை யிட்டு ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- சிறையில் அடைத்தனர்
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு அண்ணாநகர் மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்கிற பகுடு பாஸ்கர் (வயது 33) என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாஸ்கரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
- தனியார் நிறுவனத்திற்கு வேலை ஆட்களை ஏற்றி சென்ற போது விபத்து
- டிரைவர் தப்பி ஓட்டம்
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்.நேற்று மாலை கம்பெனியில் இருந்து வேலை முடிந்து சுமார் 30 பேர் கம்பெனி வேனில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர். வளர்புரம்- கிருஷ்ணாபுரம் ரோட்டில் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 25 பேர் காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வேன் டிரைவர் விஜியை (வயது 30) தேடி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் அனுமதி
- குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சின்ன பரவத்தூர் கிராமம் அருந்ததி பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமார் (40).
சனிக்கிழமை மதியம் மற்றும் இரவு நேரத்தில் சிவகுமார் உட்பட வீட்டிலிருந்த 6 பேர் சத்துணவு மாவில் உணவு தயாரித்து சாப்பிட்டுள்ளனர். சத்துணவு மாவு சாப்பிட்ட சிவக்குமார் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
அதேபோல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும் சத்துமாவு உணவு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட 9 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 1 குழந்தை உட்பட 3 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






