என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்காடு வாலாஜாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- பணியிடமாற்றத்தை கண்டித்து கோஷம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு தாலுகா அலுவலகம் வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஷ், செயலாளர் சக்கரவர்த்தி, துணை செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கிராம நிர்வாக அலுவலரின் நிர்வாக பணி காரணமாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டதை கண்டித்தும் மற்றும் உதவி கலெக்டரின் அரசு பணியாளர்கள் விரோத போக்கு கண்டித்தும் மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மவுன நிலையை கண்டித்தும்.
இடம் மாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் பணி மாறுதல் ஆணை ரத்து செய்யக் கோரியும் மீண்டும் அதே இடத்தில் வேலை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வாலாஜா தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமைத் தலைவர் வட்டத் தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.
வட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்ற ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் கோட்டாட்சியரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், அரக்கோணம் உட்கோட்டத்தில் தண்டலம் கிராமத்தில் பணிபுரிந்து வந்த பரிதி இளம்வழுதியை காரணமின்றி நெமிலி தாலுகா சிறுவளையம் கிராமத்திற்கு மாறுதல் செய்ததை கண்டித்தும் மேற்படி ஆணையை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட நிர்வாகத்தின் மவுன நிலை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்க தலைவர் சானு தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் வட்டாரத்துக்குட்பட்ட 39 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






