என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாக்லேட் கொடுத்து சென்னை சிறுமி பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது
  X

  சாக்லேட் கொடுத்து சென்னை சிறுமி பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுமி கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை அங்குள்ள தெருவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
  • கீழ்தேவதானம் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி (65). இவர் சிறுமி விளையாடி கொண்டிருந்த அப்பகுதிக்கு சென்றார்.

  ராணிப்பேட்டை:

  சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 7 வயது மகள்.

  இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  சிறுமி கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை அங்குள்ள தெருவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

  அப்போது கீழ்தேவதானம் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி (65). இவர் சிறுமி விளையாடி கொண்டிருந்த அப்பகுதிக்கு சென்றார்.

  அப்போது சிறுமியிடம் சாரங்கபாணி நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் சாக்லேட் வாங்கி தருகிறேன் கடைக்கு வா என்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

  அங்கு சிறுமியை சாரங்கபாணி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதபடி தனது வீட்டுக்கு வந்து பாட்டியிடம் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.

  மேலும் சென்னையில் உள்ள தனது பெற்றோருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சாரங்கபாணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×