என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
    • மதுபான கடை அருகே பிணமாக கிடந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள புளியங்கண்ணு திருவள்ளு வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40). மோட் டார் சைக்கிள் மெக்கானிக் காகவேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெய் சங்கர் பின்னர் வீடு திரும்ப வில்லை.

    இந்தநிலையில் அவர் புளியந்தாங்கல் பக்கத் தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதபரி சோதனைக்கு அனுப்பிவைத் தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நடவு செய்ய வழியுறுத்தல்
    • 100 நாள் வேலை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணிநேரத்தில் நூறு நாள் பணியாளர்கள் கொண்டு நடவு செய்யப்பட்டு உலக சாதனை செய்யப்பட்டது.

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்திலும் நீர்நிலை களை மேம்படுத்தும் வகையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

    நூறு நாள் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட மேலும் சுமார் 5,000 பனை விதைகளை நடவு செய்யாமல் ஏரிக்கரை மீது கொட்டப்பட்டுள்ளது.

    கலெக்டரின் உத்தரவின் பேரில் 100 நாள் வேலை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பனை விதைகளை நடவு செய்யாமல் வெட்ட வெளியில் கொட்டப்பட்டுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆய்வு செய்த போது பிடிபட்டனர்
    • மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பாஷா என்ற மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பாஷா (வயது 46) என்பவர் டாக்டருக்கு படிக்காமல், ஊசி செலுத்துவது உள்ளிட்ட ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாஷாவை கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சீல் வைப்பு அதேபோன்று திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் செயல்பட்டு வந்த இளங்கோ என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் இளங்கோ (43) என்பவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவராக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் பாஷாவுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் இளங்கோவுக்கு சொந்தமான மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • பிளாட்பாரத்தில் பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதில் கர்நாடகா மாநிலத்திற்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1 டன் ரேசன் அரிசியை கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக பிளாட்பாரத்தில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தனர். இதனை ரெயில்வே போலீஸ் பறிமுதல் செய்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்து பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கிறார்
    • ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்

    ராணிப்பேட்டை:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம் எல் ஏ ஆகியோர் அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து நாளை சனிக்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சந்திரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நிர்வாகிகள் அசோகன், சுந்தரம், சிவானந்தம் உள்பட மாநில செயற்குழு பொதுக்குழு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட இளைஞர் அணி, மாணவரணி மற்றும் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து அமைச்சர் காந்தி விடுத்துள்ள அறிக்கையில் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • லாரிகளை மடக்கி பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலைந்து சென்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த முசிறி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியிலிருந்து லாரிகள் மூலம் அதிக பாரத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு முசிறி-வாலாஜாப்பேட்டை சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.இதனால் முசிறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கற்கள் மேலே விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்று கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து, ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை, ஏழு வகையான உணவுகளையும் வழங்கி வாழ்த்தினார்.

    முன்னதாக கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த கோலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டார்.

    இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு தொகுதி ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர்கள் திமிரி அசோக், ஆற்காடு புவனேஸ்வரி சத்தியநாதன், திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமேஷ், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவ ட்டம் அரக்கோணம் அடு த்த வெங்கடேசபுரத்தில் இந்திய கடற்படை ஐஎன் எஸ் 'ராஜாளி' விமானதளம் அமைந்துள்ளது. இங்கு விமான பயிற்சி பள்ளியும், பைலட்டுகளுக்கு பயிற்சி யும் அளிக்கப்பட்டு வருகி றது. இந்த விமான தளத் தில் வளர்ந்துள்ள புற்களை சுத்தம் செய்வதற்காக ஒப் பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.

    அதன்படி, பெருமுச்சி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (45), சங்கர் (40) ஆகி யோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். அங்குள்ள ஓடு தளத்தில், 'ஏர் கன்' எனும் துப்பாக்கி யால் பறவைகளை விரட் டும் பணியில் வீரர்கள் ஈடு பட்டிருந்தனர்.

    அப்போது, புல் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் தெறித்துள்ளது.

    இதில் பலத்த காய மடைந்த தொழிலாளர்கள் இருவருக்கும் அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அரக்கோ ணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • அரக்கோணம் நாகாலம்மன் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நாகாலம்மன் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.

    இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று மாலையிலிருந்து அங்கு தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் திருத்தனிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பைக்குகள் மோதல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்த வர் அர்ஜுனன் (வயது 67). இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திருவலத்தில் இருந்து பெல் நோக்கி எம்.பி.டி. சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காலிவார்த்தாங்கல் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் பைக்கில் வந்து கொண்டி ருந்தார். பெல் நரசிங்கபுரம் அருகே வந்தபோது அர்ஜு னன் ஓட்டி வந்த பைக்குகளும், நந்தகுமார் ஓட்டி வந்தபைக்குகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பலத்த காயமடைந்த அர்ஜுனன் வாலாஜா அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிப் காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்நடைகள் தண்ணீரில் சிக்கிக் கொள்வதாக குற்றச்சாட்டு
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டாலும் குளம் முழுவதும் பாசிகளால் சூழப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே குளத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் அந்த குளத்தில் கால்நடைகள் தண்ணீர் அருந்த சென்றாலும் தண்ணீரில் சிக்கிக் கொள்கின்றன.

    எனவே பழமை வாய்ந்த கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் விபத்துக்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6 பவுன் நகை பறிமுதல்
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர்.

    அதில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த காடீஸ் என்பதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் இவரது கூட்டாளிகளான திவாகர் (28) சதீஷ் (38), ஹர்ஷத் என்பதும் இவர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இவர்கள் 4 பேரையும் வாலாஜா பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 2 பைக்குகள், 6 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் காடீஸ் என்பவர் 40 கொள்ளை வழக்குகள் 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×