என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த காட்சி.
அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளியில் குண்டு பாய்ந்து 2 பேர் படுகாயம்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவ ட்டம் அரக்கோணம் அடு த்த வெங்கடேசபுரத்தில் இந்திய கடற்படை ஐஎன் எஸ் 'ராஜாளி' விமானதளம் அமைந்துள்ளது. இங்கு விமான பயிற்சி பள்ளியும், பைலட்டுகளுக்கு பயிற்சி யும் அளிக்கப்பட்டு வருகி றது. இந்த விமான தளத் தில் வளர்ந்துள்ள புற்களை சுத்தம் செய்வதற்காக ஒப் பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, பெருமுச்சி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (45), சங்கர் (40) ஆகி யோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். அங்குள்ள ஓடு தளத்தில், 'ஏர் கன்' எனும் துப்பாக்கி யால் பறவைகளை விரட் டும் பணியில் வீரர்கள் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது, புல் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் தெறித்துள்ளது.
இதில் பலத்த காய மடைந்த தொழிலாளர்கள் இருவருக்கும் அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அரக்கோ ணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






